தமிழ்நாடு

குறைகேட்பு கூட்டத்தில் விவசாயிகள் தரையில் அமர்ந்து தர்னா

DIN

கடலூர்: கடலூர் மாவட்ட விவசாயிகள் குறைக்கேட்பு மற்றும் மேம்பாட்டிற்கான ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று காலை தொடங்கியது. 

ஆட்சியர் கி.பாலசுப்ரமணியம் தலைமை வகித்தார். கூட்டம் தொடங்கியதும் ஆட்சியர் முன்பு அமர்ந்து விவசாயிகள் திடீர் தர்னாவில் ஈடுபட்டனர். 

பட்டா மாறுதலுக்கு பணம் செலுத்தியும் பல மாதங்களாக இழுத்தடிப்பு செய்யப்படுகிறது. உள்பிரிவு மாற்றம் நடைபெறுவது இல்லை.  விவசாயிகளின் கேள்விகளுக்கு ஆட்சியர் முறையாக பதில் அளிப்பது இல்லை. அதிகாரிகளையும் பதிலளிக்க விடுவதில்லை. விவசாயிகளிடம் சுமூக உறவு கடைபிடிக்காத ஆட்சியரின் செயல்பாட்டினை கண்டித்தும் விவசாயிகள் தர்னாவில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து ஆட்சியர் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டு கூட்டம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பைக்காக பும்ராவுக்கு ஓய்வளிக்கப்படுகிறதா? கிரண் பொல்லார்டு பதில்!

இங்கு வருவேன் என நினைக்கவில்லை... பாஜகவில் இணைந்த நடிகர்!

'வீர தீர..’ துஷாரா!

மரணமடைந்த ஜெயக்குமார் எழுதிய கடிதத்தில் சொல்லியிருப்பது..: கே.வி. தங்கபாலு விளக்கம்

ரோஜா பூ..!

SCROLL FOR NEXT