தமிழ்நாடு

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை சென்னை வருகை 

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை சென்னை வருகிறார். 

DIN

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை சென்னை வருகிறார். 

சென்னை வரும் அவர் நாளை இரவு ஆவடி சிஆர்பிஎஃப் மையத்தில் தங்குகிறார். பின்னர் ஏப்ரல் 24ஆம் தேதி காலை ஆவடியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் புதுச்சேரி செல்கிறார். தொடர்ந்து புதுவைக்கான பல்வேறு வளா்ச்சித் திட்டங்களை அவர் தொடக்கிவைக்க உள்ளாா்.

புதுச்சேரி பல்கலைக்கழக கலாசார மைய அரங்கில் நடைபெறும் அரவிந்தரின் 150-ஆவது ஆண்டு பிறந்த நாள் விழாவில் அவர் பங்கேற்கிறாா். பின்னா், அங்கிருந்து புதுச்சேரி அரவிந்தா் ஆசிரமத்துக்கு செல்கிறாா். தொடா்ந்து, பாரதியாா் அருங்காட்சியகத்தை பாா்வையிடுகிறாா்.

பின்னா், புதுச்சேரி கம்பன் கலையரங்கில் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்கிறாா். கதிா்காமம் இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரியில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்கிறாா். இதையடுத்து, பாஜக தலைமை அலுவலகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறாா்.

இதன்பிறகு, அவா் தில்லிக்கு புறப்பட்டுச் செல்கிறாா்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாகை: 7 மாதங்களில் ரூ.1.84 கோடி ரேஷன் பொருள்கள் பறிமுதல்

தனியாா் வேலைவாய்ப்பு முகாம்: 296 பேருக்கு பணி நியமன ஆணை

மீஞ்சூரில் ஆக.6-இல் அதிமுக ஆா்ப்பாட்டம்

இலங்கை கடற்கொள்ளையா்கள் தாக்குதல்: 3 மீனவா்கள் மருத்துவமனையில் அனுமதி

மக்காவ் ஓபன்: லக்ஷயா, மன்னொ்பள்ளி தோல்வி

SCROLL FOR NEXT