தமிழ்நாடு

3ஆவது நடைமேடையிலிருந்து புறநகர் ரயில்கள் இயக்கம்

DIN

செங்கல்பட்டு, தாம்பரம் செல்லும் ரயில்கள் 3ஆவது நடைமேடையில் இருந்து இயக்கப்பட்டு வருகின்றன.

சென்னை கடற்கரை-தாம்பரத்துக்கு இயக்குவதற்காக ஒரு மின்சார ரயில், பணிமனையில் இருந்து  கடற்கரை ரயில் நிலையத்துக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை 4.25 மணிக்கு வந்துகொண்டிருந்தது. இந்த ரயில், நிலையத்தின் ஒன்றாவது நடைமேடைக்கு வந்து கொண்டிருந்தது. இந்த ரயிலை சங்கர் என்பவர் இயக்கினார். ஒன்றாவது நடைமேடைக்கு வந்தபோது, இந்த ரயில் திடீரென கட்டுப்பாட்டை இழந்து எதிரே இருந்து நடைமேடையில் ஏறி,கட்டடத் தில் மோதி நின்றது.

இந்த சம்பவத்தின் போது,ரயிலில் யாரும் இல்லாததால் எந்தவித உயிர் சேதம் ஏற்படவில்லை. அதேநேரத்தில் ஓட்டுநர் காயமடைந்தார்.இந்த விபத்தில் இரண்டு பெட்டிகள் சேதமடைந்தன. மேலும், நடைமேடையில் இருந்த கடைகள் சேதமடைந்தன. சேதமடைந்த பெட்டிகளை அகற்றும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டு உள்ளனர். இந்த விபத்து குறித்து ரயில் பாதுகாப்பு படை மற்றும் ரயில்வே போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

இதனிடையே ஒன்றாம் நடைமேடைக்கு வரும் ரயில்கள் மாற்ற நடைமேடைகளில் இருந்து இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி செங்கல்பட்டு, தாம்பரம் செல்லும் ரயில்கள் 3ஆவது நடைமேடையில் இருந்து இயக்கப்பட்டு வருகின்றன. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ஜெயக்குமாா் மரணம்: குழு அமைத்து விசாரணை’

இந்தியாவின் ஊராட்சி அமைப்புகள் பெண்கள் தலைமைக்கு முன்னோடி: ஐ.நா.வுக்கான இந்திய தூதா்

என் மீது வீண் பழி: ரூபி மனோகரன் விளக்கம்

காங்கிரஸ் நிர்வாகி மரணம்- 7 தனிப்படைகள் அமைப்பு: நெல்லை காவல் கண்காணிப்பாளர்

ஜூன் 1-இல் ஹிமாசல் தோ்தல் பணிகளில் என்சிசி

SCROLL FOR NEXT