பெரம்பலூரில் மருதையாறு தூர்வாரும் பணியை ஞாயிற்றுக்கிழமை தொடக்கி வைத்த தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர்.  
தமிழ்நாடு

சென்னையில் மினி பேருந்து இயக்கம் அதிகரிக்கப்படும்: அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர்

சென்னையில் நிறுத்தப்பட்ட மினி பேருந்துகள் இயக்கம் படிப்படியாக அதிகரிக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் கூறினார். 

DIN


பெரம்பலூர்: சென்னையில் நிறுத்தப்பட்ட மினி பேருந்துகள் இயக்கம் படிப்படியாக அதிகரிக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் கூறினார். 

பெரம்பலூரில் மருதையாறு தூர்வாரும் பணியை ஞாயிற்றுக்கிழமை தொடக்கி வைத்த தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் செய்தியாளர்களிடம் கூறுகையில், 

சென்னையில் நிறுத்தப்பட்ட மினி பேருந்துகளின் இயக்கம் படிப்படியாக அதிகரிக்கப்படும். சேவை தேவைப்படும் வழித்தடங்கள் கண்டறியப்பட்டு வருகிறது.

அரசுப் பேருந்துகளுக்கு காப்பீடு செய்வது தொடர்பாக துறைரீதியான ஆய்வுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அரசுப் பேருந்துகள் மூலம் விபத்துகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் இழப்பீடு வழங்க அரசு நிதி ஒதுக்கி வருகிறது.

கடந்த 2 ஆண்டுகளாக நடத்துநர் பணிக்கான உரிமம் வழங்குவது நிறுத்தப்பட்டிருக்கும் சூழலில்,  வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டெவான் கான்வேவை பாராட்டி அஸ்வின் வெளியிட்ட அருமையான பதிவு!

பனிமூட்டம் எதிரொலி: தில்லியில் நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

எஸ்.ஐ.ஆர். மூலம் குறுக்குவழியில் வெல்ல முயற்சி: மு.க. ஸ்டாலின்

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

மீண்டும் ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் தொடக்கம்!

SCROLL FOR NEXT