முகப்பு
தமிழ்நாடு

தமிழக அரசே துணைவேந்தர்களை நியமிக்கும் சட்ட மசோதா தாக்கல்

பல்கலைக்கழக துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்க வழி வகுக்கும் சட்ட மசோதாவை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பேரவையில் இன்று தாக்கல் செய்தார்.

Updated On : 25 ஏப்ரல், 2022 at 3:23 PM
தமிழக அரசே துணைவேந்தர்களை நியமிக்கும் சட்ட மசோதா தாக்கல்
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:34 PM

சென்னை: பல்கலைக்கழக துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்க வழி வகுக்கும் சட்ட மசோதாவை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பேரவையில் இன்று தாக்கல் செய்தார்.

இதையடுத்து, துணைவேந்தரை மாநில அரசே நியமிக்கும் மசோதா தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படுகிறது. சட்டமசோதா மீது விவாதம் நடைபெற்று வருகிறது.

பல்கலைக்கழக துணைவேந்தர்களை மாநில அரசின் ஆணையின் மூலம் தேர்வு செய்யும் வகையில், இந்த சட்ட மசோதா நிறைவேற்றப்படுகிறது.

பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத் மாநிலத்தில் உள்ளது போல் தமிழகத்திலும், மாநில அரசே பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமித்துக் கொள்ள வகை செய்யும் சட்ட மசோதாவை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பேரவையில் இன்று தாக்கல் செய்து உரையாற்றினார்.

அப்போது அவர் கூறுகையில், பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனத்தில் மாநில அரசை ஆளுநர் மதிக்காமல் செயல்படுவது மக்கள் விரோதப் போக்கையே காட்டுகிறது. பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநில அரசே நியமிக்கவேண்டும். மாநில அரசை மதிக்காமல் ஆளுநர் செயல்படும் போக்கு தலைதூக்கி உள்ளது. 

துணைவேந்தர் நியமன சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பேரவையிலிருந்து பாஜக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். 

துணைவேந்தர் நியமன மசோதா மீது பேரவையில் விவாதம் நடைபெற்று வருகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.