தமிழ்நாடு

எழும்பூர் ரயில் நிலையம்: ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணியை காப்பாற்றிய பெண் காவலர்

எழும்பூர் ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் ஏற முற்பட்டு தவறி விழுந்த பயணியை ரயில்வே பெண் காவலர் காப்பாற்றியுள்ளார். 

DIN

எழும்பூர் ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் ஏற முற்பட்டு தவறி விழுந்த பயணியை ரயில்வே பெண் காவலர் காப்பாற்றியுள்ளார். 

சென்னை எழும்பூரில் இருந்து திருச்சி வரை செல்லும் ராக்போர்ட் விரைவு ரயில் நேற்று இரவு 11.30 மணி அளவில் புறப்பட்டது. அப்போது நாற்பது வயது தக்க பயணி ஒருவர் பொது பெட்டியில் ஏறுவதற்கு பதிலாக குளிர்சாதனப் பெட்டிக்குள் தவறுதலாக ஏறிவிடுகிறார். உடனே அவர் பொது பெட்டிக்கு செல்வதற்காக இறங்கியுள்ளார்.

ஆனால் மெதுவாக சென்றுகொண்டிருந்த ரயிலுக்கும், நடைமேடைக்கும் இடையே அவர் சிக்கிக்கொண்டார். அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த ரயில்வே காவலர் மாதுரி தனியாக அவரை காப்பாற்றியுள்ளார்.  இதுதொடர்பான சிசிடிவி காட்சி தற்போது இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

துரிதமாக செயல்பட்டு பயணியை காப்பாற்றிய பெண் ரயில்வே காவலரை பலர் பாராட்டி வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஓய்வுபெற்றார் மோஹித் சர்மா

உரிமை கோரப்படாத 13 வாகனங்கள் டிச. 10 இல் ஏலம்

திருச்சி மாவட்டத்தில் பரவலாக மழை - சராசரியாக 4.86 மி.மீ. பதிவு

போசம்பட்டி அரசுப் பள்ளியில் உலக மாற்றுத்திறனாளிகள் தினம்

கரூா் சம்பவம்: வேலுச்சாமிபுரத்தில் சிபிஐ கண்காணிப்புக் குழுத் தலைவா் ஆய்வு - பிரேதப் பரிசோதனை செய்த மருத்துவா்களிடம் விசாரணை

SCROLL FOR NEXT