தமிழ்நாடு

ஆத்தூரில் சிறுமி தலை துண்டித்துக் கொலை: இளைஞருக்கு மரண தண்டனை

சேலத்தில் சிறுமியின் தலையைத் துண்டித்துக் கொலை செய்த இளைஞருக்கு மரண தண்டனை வழங்கி போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

DIN

சேலத்தில் சிறுமியின் தலையைத் துண்டித்துக் கொலை செய்த இளைஞருக்கு மரண தண்டனை வழங்கி போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே தளவாய்பட்டி ஊராட்சி பகுதியைச் சேர்ந்தவர் சாமுவேல். இவரது 14 வயது மகள், தளவாய்பட்டி ஊராட்சி அரசு உயர்நிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார்.

கடந்த 2018 இல் வீட்டில் இருந்தபோது, சிறுமியை அதேபகுதியை சேர்ந்த தினேஷ்குமார் (25) என்பவர் தலையைத் துண்டித்து கொடூரமாகக் கொலை செய்தார். இந்த சம்பவம் சேலம் மாவட்டம் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக ஆத்தூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து தினேஷ்குமாரை கைது செய்து, சேலம் மத்தியச் சிறையில் அடைத்தனர். அவர் மீது போக்சோ சட்டம் பாய்ந்தது. இதுதவிர, குண்டர் தடுப்பு சட்டத்திலும் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் இந்த வழக்கு போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி முருகானந்தம் கொலை செய்த தினேஷ்குமார் குற்றவாளி என நீதிமன்றம் உறுதி செய்த நிலையில் அவருக்கு மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கீழடி அருங்காட்சியகத்தை பிரதமர் பார்வையிட வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் அழைப்பு!

பெண் மீது மோதி கவிழ்ந்த ஆட்டோ! 8 பேர் காயம்! | Selam

தென்னாப்பிரிக்காவில் மதுபான விடுதியில் துப்பாக்கிச்சூடு: 9 பேர் பலி, 10 பேர் காயம்

”தமிழ் மீதும் தமிழர் மீதும் மத்திய அரசுக்கு வெறுப்பு!”: முதல்வர் மு.க.ஸ்டாலின்

உருவ கேலிக்கு உள்ளான ஸ்மிருதி மந்தனாவின் புதிய புகைப்படங்கள்!

SCROLL FOR NEXT