முகப்பு
தமிழ்நாடு

மேட்டூர் அணை நீர்மட்டம் அதிகரிப்பு

சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள மேட்டூர் அணையின் நீர்மட்டம் நேற்று காலை 105.40 அடியாக இருந்த நிலையில், இன்று காலை 105.51 அடியாக உயர்ந்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:05 AM
மேட்டூர் அணை நீர்மட்டம் அதிகரிப்பு
பகிர்:

சேலம்: சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள மேட்டூர் அணையின் நீர்மட்டம் நேற்று காலை 105.40 அடியாக இருந்த நிலையில், இன்று காலை 105.51 அடியாக உயர்ந்துள்ளது.

இன்று காலை மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 2360 அடியாகக் குறைந்து உள்ளது. அதேவேளையில், நேற்று காலை 105.40 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 105.51 அடியாக உயர்ந்துள்ளது. நீர்இருப்பு 72.16 டிஎம்சியாக  உள்ளது.

அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு  1,500  கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

காவிரியின் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்து வருகிறது. அணையிலிருந்து குடிநீருக்கு திறக்கப்படும் நீரின் அளவை விட அணைக்கு வரும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
 

முழு கட்டுரையைப் படிக்க →