வளைகுடா சுற்றுப் பயணத்தின் ஒரு பகுதியாக அபுதாபி சென்றிருக்கும் மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்களை அபுதாபி தமிழ் மன்ற தலைவர் சிவக்குமார், பொதுச்செயலாளர் நீல கண்டன் , துணைத் தலைவர் பழனிசாமி, இணைச் செயலாளர் சசி குமார் ஆகியோர் சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை மனுவாக கொடுத்தனர்.
அமீரகத்திலிருந்து இறந்தவர்களை கொண்டு வரும் போது விமான நிலைய சேவைகளை விரைந்து முடித்துக் கொடுத்தல், உடலை அவரவர் வீட்டுக்கு எடுத்துச் செல்ல இலவச சிறப்பு ஆம்புலன்ஸ் சேவை வழங்குதல், திருச்சி - அபுதாபி ஏர் இந்தியா விமான சேவையை வாரம் மூன்று முறை விரிவுப்படுத்துதல், அபுதாபியில் கட்டப்பட்டு வரும் கோயிலில் தமிழக இந்துக்கள் விரும்பும் முருகன் வழிபாட்டுக்கு மத்திய அரசிடம் வலியுறுத்துதல் என கோரிக்கைகளை எடுத்துரைத்தனர்.
இதுகுறித்து துறை சார்ந்த அமைச்சகங்களின் கவனத்திற்கு எடுத்துச் சென்று உதவுவதாகவும், அமீரக மனிதநேய கலாச்சரப் பேரவையுடனும் பகிர்ந்து கொள்வதாகவும் பொதுச் செயலாளர் அவர்கள் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.