தேர் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்
தஞ்சாவூர் தேர் திருவிழாவில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் மு.க. ஸ்டாலின் புதன்கிழமை உத்தரவிட்டுள்ளார்.
தஞ்சாவூர் தேர் திருவிழாவில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் மு.க. ஸ்டாலின் புதன்கிழமை உத்தரவிட்டுள்ளார்.
தஞ்சாவூர் அருகே களிமேடு கிராமத்தில் புதன்கிழமை அதிகாலை நடைபெற்ற தேர்த் திருவிழாவில் மின்சாரம் தாக்கியதில் 11 பேர் உயிரிழந்தனர். மேலும் 15 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதையும் படிக்க | தேர் விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு மோடி இரங்கல்: தலா ரூ. 2 லட்சம் நிவாரணம்
Advertisement
Advertisement
முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தியில்,
“தஞ்சாவூர் மாவட்டம், களிமேடு கிராமத்தில் இன்று அதிகாலை நடைபெற்ற தேர் திருவிழாவில் எதிர்பாராத விதமாக தேர் மின்கம்பியில் உரசியதால் ஏற்பட்ட விபத்தில் 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டனர் என்ற துயரமான செய்தியினைக் கேள்வியுற்று மிகுந்த வேதனையடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இதையும் படிக்க | தேர் திருவிழா விபத்து: குடியரசுத் தலைவர் இரங்கல்
மேலும், இவ்விபத்தில் 15 நபர்கள் தற்போது சிகிச்சையில் உள்ளதாக அறிகிறேன், அவர்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கவும் விபத்து பகுதியில் மீட்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தவும் மாவட்ட நிர்வாகத்திற்கும், காவல்
துறைக்கும் உத்தரவிட்டுள்ளேன்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு தலா ஐந்து இலட்சம் உடனடியாக முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து நிதியுதவி வழங்கிட உத்தரவிட்டுள்ளேன்.”
இதையும் படிக்க | தஞ்சை அருகே தேர் திருவிழாவில் மின்சாரம் பாய்ந்து 11 பேர் பலி