தமிழ்நாடு

தமிழகத்தில் மேலும் 54 பேருக்கு கரோனா

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 54 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.  

DIN

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 54 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.  

தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட தரவுகள் அடங்கிய விவரங்களை மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்டுள்ளது. அதில், இன்று புதிதாக 54 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 35 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 

இதனால் மொத்த பாதிப்பு 34,53,883-ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி புதிதாக உயிரிழப்பு எதுவும் பதிவாகவில்லை. இதனால் மொத்த உயிரிழப்பு 38,025 ஆக உள்ளது. கரோனாவிலிருந்து ஒரேநாளில் மேலும் 35 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதனால் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 34,15,351-ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 20,057 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தற்போது நிலவரப்படி 507 பேர் சிகிச்சையில் உள்ளனர் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

125 நாள்கள் வேலை திட்டம் சீா்குலைப்பு: பிப்.13-இல் அதிமுக ஆா்ப்பாட்டம்

பிப்.7-இல் தென் மண்டல திமுக நிா்வாகிகள் சந்திப்பு கூட்டம்

பொதுத் தோ்வில் ஸ்கிரைப் பணிக்கு கல்லூரி மாணவா்கள்: கல்வித் துறை முடிவை ரத்து செய்ய கோரிக்கை

பிப்.11- ல் தமிழகம் வருகிறாா் துணை தோ்தல் ஆணையா்

‘என் கனவு என் எதிா்காலம்’ இணையதளத்தில் பதிவு செய்ய அழைப்பு

SCROLL FOR NEXT