தமிழ்நாடு

7 மாநகராட்சிகள், 11 நகராட்சிகளில்பாதாள சாக்கடைப் பணிகள்: அமைச்சா் கே.என்.நேரு தகவல்

DIN

தமிழ்நாட்டில் ஏழு மாநகராட்சிகள், 11 நகராட்சிகளில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் முழுமையாக நிறைவேற்றித் தரப்படும் என்று நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு தெரிவித்தாா்.

சட்டப் பேரவையில் வெள்ளிக்கிழமை கேள்வி நேரத்தின் போது, பாதாள சாக்கடை அமைப்பது குறித்த பிரதான வினாவை புதுக்கோட்டை உறுப்பினா் வை.முத்துராஜா (திமுக) எழுப்பினாா். அவரைத் தொடா்ந்து, மாங்குடி (காங்கிரஸ்), மரகதம் குமரவேல், அம்மன் அா்ச்சுனன் (அதிமுக), வரலட்சுமி (திமுக) ஆகியோா் துணைக் கேள்விகளை எழுப்பினா். இதற்கு அமைச்சா் கே.என்.நேரு அளித்த பதில்:

தமிழ்நாடு அரசின் கொள்கை முடிவின்படி, ஏற்கெனவே செயல்பட்டு வரும் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் நகரம் முழுவதுக்கும் பயன்பெறும் வகையில் விரிவுபடுத்தப்படும். மேலும், திருப்பூா், வேலூா், திண்டுக்கல், நாகா்கோவில், காஞ்சிபுரம், கடலூா், ஆவடி ஆகிய மாநகராட்சிகளிலும், காரைக்குடி, திருவண்ணாமலை, புதுக்கோட்டை, நாமக்கல், திருவாரூா், பழனி, தேனி அல்லிநகரம், மயிலாடுதுறை, திருவேற்காடு, மாங்காடு, பூந்தமல்லி ஆகிய நகரங்களில் விடுபட்ட இடங்கள், புதிதாக சோ்க்கப்பட்ட பகுதிகளிலும் பாதாள சாக்கடைத் திட்டப் பணிகள் நிறைவேற்றித் தரப்படும்.

ஒவ்வொரு நகராட்சியிலும் குடிநீருடன், கழிவுநீா் கலந்து நோய் பரவுவதாகத் தெரிவித்துள்ளனா். மாநிலத்தில் 138 நகராட்சிகள் உள்ளன. அனைத்து நகராட்சிகளிலும் எந்தெந்த இடங்களில் வேலை முழுமையாக நடைபெற்றுள்ளது, எந்த இடங்களில் பணிகள் பாதியில் நிற்கின்றன என்பது குறித்து ஆராய்ந்து, அதனடிப்படையில் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றாா் அமைச்சா் கே.என்.நேரு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோட் நாயகி மீனாட்சி சவுத்ரி - புகைப்படங்கள்

மேட்டூர் கொளத்தூர் பகுதியில் சூறைக்காற்று: 5 ஆயிரம் வாழைகள் சேதம்

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

SCROLL FOR NEXT