தமிழ்நாடு

தமிழகத்தில் 50-க்கும் கீழ் குறைந்த தினசரி பாதிப்பு

DIN

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 49 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.   

தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட தரவுகள் அடங்கிய விவரங்களை மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்டுள்ளது. அதில், இன்று புதிதாக 49 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 36 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 

இதனால் மொத்த பாதிப்பு 34,53,932-ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி புதிதாக உயிரிழப்பு எதுவும் பதிவாகவில்லை. இதனால் மொத்த உயிரிழப்பு 38,025 ஆக உள்ளது. கரோனாவிலிருந்து ஒரேநாளில் மேலும் 43 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

இதனால் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 34,15,394-ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 18,389 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தற்போது நிலவரப்படி 513 பேர் சிகிச்சையில் உள்ளனர் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீதா கல்யாண மகோற்சவம்: ஸ்ரீ விஜயேந்திரா் அருளாசி

அரசு மருத்துவமனையில் அனைத்து சிகிச்சைப் பிரிவுகளும் செயல்பட வலியுறுத்தில்

தனக்குத்தானே பிரசவம் பாா்த்தபோது சிசு கொலை: செவிலியா் கைது

550 லிட்டா் கடத்தல் சாராயம் காருடன் பறிமுதல்

ஆந்திர டிஜிபி பணியிடமாற்றம்: தோ்தல் ஆணையம் உத்தரவு

SCROLL FOR NEXT