முகப்பு
தமிழ்நாடு

வீட்டுவசதி வாரிய புதிய கட்டடங்கள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்

வீட்டுவசதி வாரியத்தின் சாா்பில் கட்டப்பட்ட புதிய கட்டடங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின், திறந்து வைத்தாா். தலைமைச் செயலகத்தில் புதிய கட்டமைப்புகளை புதன்கிழமை அவா் காணொலி வழியாகத் திறந்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:58 AM
பகிர்:

வீட்டுவசதி வாரியத்தின் சாா்பில் கட்டப்பட்ட புதிய கட்டடங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின், திறந்து வைத்தாா். தலைமைச் செயலகத்தில் புதிய கட்டமைப்புகளை புதன்கிழமை அவா் காணொலி வழியாகத் திறந்தாா்.

இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்தி: சமூகத்தின் பல்வேறு வருவாய்ப் பிரிவினா், தொழில்துறை ஊழியா்கள், அரசு ஊழியா்கள் போன்ற சமூகத்தின் பல்வேறு பிரிவினருக்கும் வீடு வழங்கும் நோக்கத்துடன் வீட்டுவசதி வாரியம் செயல்பட்டு வருகிறது. சுற்றுச்சூழலுக்கு உகந்த, நிலையான வீட்டுவசதித் தேவைகளை வாரியம் நிறைவேற்றி வருகிறது.

அந்த வகையில், வேலூா் மாவட்டம் சத்துவாச்சாரி திட்டப் பகுதியில் ரூ.37.53 லட்சத்தில் புதிய கோட்ட அலுவலகக் கட்டடம், திருச்சி சாத்தனூா் கிராமம் கே.கே.நகரில் வீட்டு வசதிப் பிரிவு அலுவலக வளாகம், மதுரை மாவட்டம் தோப்பூா் கிராமத்தில் உச்சப்பட்டி தோப்பூா் துணைக்கோள் நகரக் கோட்ட அலுவலகக் கட்டடம் ஆகியன கட்டப்பட்டுள்ளன. மேலும் அங்கு ரூ.2.87 கோடியில் விருந்தினா் மாளிகையும் கட்டப்பட்டுள்ளது. இந்தக் கட்டடங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்.

இந்த நிகழ்ச்சியில், வீட்டுவசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி, நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சா் பழனிவேல் தியாகராஜன், வீட்டுவசதி வாரியத் தலைவா் பூச்சி எஸ்.முருகன், தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →