செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழா 
தமிழ்நாடு

ஓடிடி தளத்தில் செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா

செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவை ஓடிடி தளத்தில் வெளியிட தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

DIN

செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவை ஓடிடி தளத்தில் வெளியிட தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

சென்னை அருகே மாமல்லபுரத்தில் 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி, ஜூலை 27ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 10 வரை நடைபெற்று வருகிறது. மொத்தம் 187 நாடுகளில் இருந்து 1500க்கும் மேற்பட்டோர் போட்டியில் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த போட்டிக்கான தொடக்க விழாவானது, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் மிக பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த நிகழ்வில், பிரதமர் நரேந்திர மோடி, ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா உலகளவில் பேசப்பட்ட நிலையில், நிறைவு விழாவையும் பிரம்மாண்டமாக நடத்த சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் தமிழக அரசு ஏற்பாடுகளை செய்து வருகின்றது.

இந்நிலையில், நிறைவு விழாவை ஒளிபரப்ப காட்சி ஊடகங்கள் மற்றும் ஓடிடி நிறுவனங்களுக்கு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது. உரிமம் பெறுபவர்களுக்கு ஓராண்டிற்கான ஒளிபரப்பு உரிமமும் வழங்கப்படவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காயல்பட்டினத்தில் கந்தூரி விழா

அரிவாளை வைத்து மிரட்டும் வகையில் ரீல்ஸ் வெளியிட்டவர் கைது!

கோவில்பட்டி பள்ளியில் இருபெரும் விழா

திருச்சி ராமஜெயம் கொலை வழக்கு: பாளை சிறை கைதியிடம் டிஐஜி விசாரணை

குவஹாட்டியில் ஏழுமலையான் கோயில்: அஸ்ஸாம் முதல்வா் திருமலையில் ஆலோசனை

SCROLL FOR NEXT