முகப்பு
தமிழ்நாடு

நெல் மூட்டைகளை வியாபாரிகள் கொள்முதல் செய்யாததால் விவசாயிகள் சாலை மறியல்

செய்யாறு  ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில்  நெல் மூட்டைகளை வியாபாரிகள் கொள்முதல் செய்யாததால் விவசாயிகள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:58 AM
செய்யாறில் நெல் மூட்டைகளை வியாபாரிகள் கொள்முதல் செய்யாததைக் கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகள்.
பகிர்:


செய்யாறு: செய்யாறு  ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில்  நெல் மூட்டைகளை வியாபாரிகள் கொள்முதல் செய்யாததால் விவசாயிகள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு  ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில்  வியாபாரிகள்,  நெல் மூட்டைகளை கொள்முதல் செய்யாததைக் கண்டித்து  விவசாயிகள் ஒழுங்குமுறை விற்பனை கூடம் எதிரே ஆற்காடு சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். 

தகவலறிந்த செய்யாறு டி.எஸ்.பி. செந்தில் தலைமையில் செய்யாறு போலீசார் விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்டு இருந்த விவசாயிகளிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, வேளாண் பொருள்களை உடனே கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்  என உறுதியளித்ததின் பேரில்,  சாலை மறியலில் ஈடுபட்டு இருந்த விவசாயிகள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால்  இப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

கடைகளை ஒதுக்கீடு செய்ய வியாபாரிகள் கோரிக்கை
செய்யாறு ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில், புதியதாக  கட்டப்பட்டுள்ள  10 கடைகளில்,  ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வேளாண் பொருட்களை கொள்முதல் செய்யும் வியாபாரிகளுக்கு ஒதுக்க வேண்டும் எனவும்,  வளாகத்தில் கட்டப்பட்டுள்ள கடைகளை வெளி நபர்களுக்கு ஒதுக்கீடு செய்யக் கூடாது  என்றும்,  பொது ஏலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் வியாபாரிகள் வியாழக்கிழமை வேளாண் பொருட்களை கொள்முதல் செய்யவில்லை என தெரிய வருகிறது.

இச்சம்பவத்தால்,  விவசாயிகள் கொண்டு வந்த சுமார் 3 ஆயிரம் நெல் மூட்டைகளை  கொள்முதல் செய்யாததால் விவசாயிகள் பலமணி நேரம் காத்திருக்க வேண்டிய பரிதாப நிலை ஏற்பட்டது.
 

முழு கட்டுரையைப் படிக்க →