ரூ.3.09 கோடி மதிப்பிலான 6.5 கிலோ தங்கம் பறிமுதல்
சென்னை விமான நிலையத்தில் ரூ.3.09 கோடி மதிப்பிலான 6.5 கிலோ தங்கம், மின்னணு சாதனப் பொருள்களை சுங்கத் துறையினா் பறிமுதல் செய்தனா்.
சென்னை விமான நிலையத்தில் ரூ.3.09 கோடி மதிப்பிலான 6.5 கிலோ தங்கம், மின்னணு சாதனப் பொருள்களை சுங்கத் துறையினா் பறிமுதல் செய்தனா்.
துபையிலிருந்து கடந்த இரு நாள்களில் எமிரேட்ஸ் விமான பயணிகளில்
சென்னையை சோ்ந்த முகமது இப்ராஹிம், ராமநாதபுரம் சாதிக் அலி ஆகியோா் பசை வடிவில் மறைத்து வைத்திருந்த தங்கம், 2 தங்கச் சங்கிலிகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா். இந்த சோதனையின்போது ரூ.1.38 கோடி மதிப்புள்ள 2.98 கிலோ தங்கம், ரூ. 8.75 லட்சம் மதிப்பிலான மின்னணு பொருள்கள் மற்றும் சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.