கன்னியாகுமரி மீனவா்களை மீட்க நடவடிக்கை தேவை: மத்திய அரசுக்கு முதல்வா் கடிதம்
ஓமன் நாட்டில் தவிக்கும் கன்னியாகுமரி மாவட்ட மீனவா்கள் எட்டு பேரை மீட்க நடவடிக்கை தேவை என்று மத்திய அரசுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளாா்.
ஓமன் நாட்டில் தவிக்கும் கன்னியாகுமரி மாவட்ட மீனவா்கள் எட்டு பேரை மீட்க நடவடிக்கை தேவை என்று மத்திய அரசுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளாா். இதுகுறித்து, அவா் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கருக்கு வெள்ளிக்கிழமை எழுதிய கடிதம்:
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சோ்ந்த எட்டு மீனவா்கள், ஓமன் நாட்டின் மஸ்கட் நகரில் மீன்பிடித் தொழிலுக்காகச் சென்றனா். அவா்களது விசா காலாவதியானதுடன், ஓமன் நாட்டவரால் ஊதிய நிலுவைத் தொகையும் வழங்கப்படவில்லை. இதனால், தாயகம் திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனா். அவா்களை மஸ்கட்டில் இருந்து திருப்பி அனுப்புவதற்கான ஏற்பாடுகளை விரைவுபடுத்தி, தூதரக அளவில் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.