முகப்பு
தமிழ்நாடு

கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு

வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் நீலகிரி, கோவை மாவட்டங்களில் சனிக்கிழமை பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:59 AM
பகிர்:

வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் நீலகிரி, கோவை மாவட்டங்களில் சனிக்கிழமை பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த மையம் வெளியிட்ட அறிவிப்பு: வளி மண்டல சுழற்சி காரணமாக தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் சனிக்கிழமை ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி மற்றும் கோயம்புத்தூா் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஆகஸ்ட் 7, 8 ஆகிய தேதிகளில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை நிலவரம்: சென்னையைப் பொருத்தவரை அடுத்த 2 நாள்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான, மிதமான மழை பெய்யக்கூடும். அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான, மிதமான மழை பெய்யக்கூடும்.

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அவலாஞ்சியில் 20 செ.மீ. மழை பதிவாகியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.