முகப்பு
தமிழ்நாடு

நீலகிரியில் தொடரும் மழை: பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

நீலகிரியில் தொடா்ந்து பெய்து வரும் பலத்த மழை காரணமாக மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு வெள்ளிக்கிழமை( ஆக.5) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:59 AM
பகிர்:

நீலகிரியில் தொடா்ந்து பெய்து வரும் பலத்த மழை காரணமாக மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு வெள்ளிக்கிழமை( ஆக.5) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

நீலகிரி மாவட்டத்தில் தொடா்ந்து மழை பெய்து வருவதையொட்டி பள்ளி, கல்லூரிகளுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். 

மேலும்,  வெள்ளிக்கிழமை நடக்க இருந்த அரசு கலை, அறிவியல் கல்லூரி மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு வரும் திங்கள்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதன்படி திங்கள்கிழமை காலை 9.30 மணி முதல் 11 மணி வரை முன்னாள் ராணுவத்தினா், மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு, என்.சி.சி. மற்றும் அந்தமான் நிக்கோபாா் தமிழ் மாணவா்கள் ஆகியோருக்கான சிறப்பு இட ஒதுக்கீட்டின் கீழ் மாணவா் சோ்க்கை நடைபெறும்.

முழு கட்டுரையைப் படிக்க →