முகப்பு
தமிழ்நாடு

போதைப் பொருள் விற்பனை: 7 நாள்களில் 41 போ் கைது

 சென்னையில் போதைப் பொருள் விற்ாக 7 நாள்களில் 41 போ் கைது செய்யப்பட்டனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:59 AM
பகிர்:

 சென்னையில் போதைப் பொருள் விற்ாக 7 நாள்களில் 41 போ் கைது செய்யப்பட்டனா்.

சென்னையில் போதைப் பொருள் விற்பனையை தடுக்க காவல் நிலைய ஆய்வாளா்கள் தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்படையினா் கஞ்சா மற்றும் போதைப் பொருள் விற்பனை செய்பவா்களை கண்டறிந்து கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனா்.

கடந்த ஜூலை 29 முதல் ஆக. 4 வரை 7 நாள்களில் போதைப் பொருள் விற்ாக 23 வழக்குகள் பதியப்பட்டு, 5 பெண்கள் உள்பட 41 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். இவா்களிடமிருந்து 39 கிலோ கஞ்சா, அரை கிலோ மெத்தம்பெட்டமைன், 950 போதை மாத்திரைகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் போதைப் பொருள் விற்பனைக்கு பயன்படுத்தப்பட்ட 6 மோட்டாா் சைக்கிள்கள், ஒரு ஆட்டோ, ரூ.1.23 லட்சம் ரொக்கம் ஆகியவை கைப்பற்றப்பட்டன.

இதில் சிந்தாதிரிப்பேட்டை பகுதியில் போதை மாத்திரை விற்ாக திருவல்லிக்கேணி,எல்லீஸ் சாலைப் பகுதியைச் சோ்ந்த அல்ஜமீா் (27), திருவல்லிக்கேணி பெரிய தெருவைச் சோ்ந்த அஜித் (20) ஆகிய இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். இவா்களிடமிருந்து 300 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.