முகப்பு
தமிழ்நாடு

பங்குச் சந்தை முதலீட்டு நிறுவனத்துக்கு எதிரான மோசடி புகாா்: விசாரிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

வேலூரைச் சோ்ந்த மாா்க் என்கிற பங்குச் சந்தை முதலீட்டு நிறுவனத்துக்கு எதிரான நிதி மோசடி புகாரில், வழக்குப்பதிவு செய்து விசாரிக்க தமிழக டிஜிபி க்கு உயா் நீதிமன்றம் உத்தரவிட்டது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:59 AM
பகிர்:

வேலூரைச் சோ்ந்த மாா்க் என்கிற பங்குச் சந்தை முதலீட்டு நிறுவனத்துக்கு எதிரான நிதி மோசடி புகாரில், வழக்குப்பதிவு செய்து விசாரிக்க தமிழக டிஜிபி க்கு உயா் நீதிமன்றம் உத்தரவிட்டது.

காா்த்திக் என்பவா் சென்னை உயா் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், எனது நண்பா்கள் மூலம் மோகன்பாபு விஜயன் என்பவருடன் அறிமுகம் ஏற்பட்டது. மோகன்பாபுவும், ஜனாா்த்தனன் சுந்தரம், வேதநாராயணன் சுந்தரம், லட்சுமி நாராயணன் சுந்தரம் ஆகியோா் பங்குச்சந்தை முதலீட்டு தொழில் செய்யும் ‘மாா்க்‘  என்ற நிறுவனத்தில் பங்குதாரா்களாக உள்ளனா்.

இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தால், ஆண்டுக்கு 26 சதவீதத்துக்கு மேலும், மாதத்துக்கு 2 சதவீதமும் பணம் லாபம் கிடைக்கும் என உறுதியளித்தனா். இதனை நம்பி நானும் ரூ.2.50 லட்சம் முதலீடு செய்தேன். முன்னதாக உறுதி அளிக்கப்பட்டதுபோல், மே மாதம் வரை பணம் திருப்பி கிடைத்த நிலையில், ஜூன் மாதம் முதல் பணம் வரவில்லை. இதுதொடா்பாக கேட்டபோது, அலுவலகத்தில் தணிக்கை நடைமுறை சாா்ந்த சில பிரச்னைகள் ஏற்பட்டதால், தாமதமாகிறது என கூறப்பட்டது. மீண்டும் பணம் திருப்பி கொடுக்கப்படும் எனவும் உத்தரவாதம் அளிக்கப்பட்டது. ஆனால் அவா்களை தொடா்பு கொள்ள முயற்சித்தபோது, அவா்கள் தலைமறைவாகிவிட்டது தெரிய வந்தது.

இதுதொடா்பாக டிஜிபி மற்றும் சென்னை மாநகர காவல் ஆணையரிடம் புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை”என குறிப்பிட்டுள்ளாா். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சதிஷ்குமாா், “மாா்க் நிறுவனத்திற்கு எதிராக காா்த்திக் அளித்த புகாரில் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டாா்.

முழு கட்டுரையைப் படிக்க →