தமிழ்நாடு

தொடர்ந்து 20-வது நாளாக முழுக் கொள்ளளவுடன் மேட்டூர் அணை!

DIN

மேட்டூர்: மேட்டூர் அணையின் நீர் மட்டம் தொடர்ந்து 20வது நாளாக 120 அடியாக நீடிக்கிறது.

கர்நாடக மாநிலத்தில் காவிரியின் நீர்பிடிப்புப் பகுதிகளிலும் தமிழகத்தில் காவிரியின் துணை நதிகளான பாலாறு, சின்னாறு, தொப்பையாறுகளின் நீர்பிடிப்புப் பகுதிகளிலும் பெய்து வரும் தொடர்மழையின் காரணமாக கடந்த 16 ஆம் தேதி மேட்டூர் அணை நிரம்பி முழுக் கொள்ளவான 120 அடியை எட்டியது. தொடர்ந்து 20 நாட்களாக அணை நிரம்பிய நிலையில் உள்ளது.

காவிரியில் ஏற்பட்ட பெருவெள்ளம் காரணமாக மேட்டூர் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. கடந்த 20 நாட்களில் அணைக்கு 132 டி.எம்.சி. தண்ணீர் வந்துள்ளது. அணையின் பாதுகாப்பு கருதி 100 டி.எம்.சி வெள்ளநீர் வெளியேற்றப்பட்டுள்ளது.

நேற்று அதிகபட்சமாக மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 2,10,000 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணை மின் நிலையம், சுரங்கமின் நிலையம் மற்றும் எல்லீஸ்சேடல்(16கண் பாலம்) வழியாக வினாடிக்கு 2,10,000 கனஅடி நீர் திறக்கப்பட்டது. இன்று மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 2,40,000 கனஅடி வரை நீர்வரத்து அதிகரிக்கும் என எதிர்பாத்த நிலையில் காவிரியின் நீர்ப் பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் மழையின் அளவு சற்று குறைந்தது. அதனால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவும் சற்று குறைந்து உள்ளது.

நேற்று மாலை வினாடிக்கு 2,10,000 கனஅடி வீதம் வந்துகொண்டிருந்த நீர் வரத்து இன்று காலை வினாடிக்கு 2,00,000 கனஅடியாக குறைந்துள்ளது. அணைக்கு நீர் வரத்து குறைந்தாலும் அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு வினாடிக்கு 2,10,000 கனஅடியாக நீடித்து வருகிறது. அணை மின்நிலையம் மற்றும் சுரங்க மின்நிலையங்கள் வழியாக வினாடிக்கு 23,000 கனஅடி வீதமும், எல்லீஸ்சேடலான 16 கண் பாலம் வழியாக வினாடிக்கு 1,87,000 கனஅடி நீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது.

அணையின் நீர் மட்டம் 120.05 அடியாகவும் நீர் இருப்பு 93.55 டி.எம்.சியாகவும் உள்ளது. கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 400 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் இடது கரையில் உள்ள வெள்ளக்கட்டுப்பாட்டு அறையில் நீர்வளத்துறை அதிகாரிகள் 24 மணி நேரமும் கண்கானிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

திரௌபதி அம்மன் கோயில் திருவிழா மே 13-இல் தொடக்கம்

விறுவிறுப்படையும் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

பளியா் பழங்குடியினா் இதுவரை அரசு பணி வாய்ப்பே பெறவில்லை

மதுரை மாவட்டத்தில் 13 மையங்களில் ‘நீட்’ தோ்வு

SCROLL FOR NEXT