முகப்பு
தமிழ்நாடு

என்.எல்.சி. விவகாரம்: பிரதமருக்கு முதல்வர் கடிதம்

நிலம் தந்த குடும்பத்தினருக்கு என்.எல்.சி. பணிகளில் உரிய முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று முதல்வர் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

Updated On : 5 ஆகஸ்ட் 2022, 4:38 pm IST
கோப்புப்படம்
பகிர்:

சென்னை: நிலம் தந்த குடும்பத்தினருக்கு என்.எல்.சி. பணிகளில் உரிய முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று முதல்வர் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

பிரதமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தில் தெரிவித்ததாவது:

என்.எல்.சி.க்கு நிலம் தந்த குடும்பத்தினருக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும்

Advertisement

Advertisement

நிலம் தந்த குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு சிறப்புத் தேர்வு நடத்தி என்.எல்.சி.யால் நியமிக்க வேண்டும். பயிற்சி பட்டதாரி பொறியாளர் தேர்வில் முன்னுரிமை வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்.

கேட்(GATE) தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பயிற்சி பட்டதாரி பொறியாளர்களை நியமிக்கக் கூடாது.  இந்த விவகாரத்தில் பிரதமர் தலையிட்டு விரைவில் சாதகமான முடிவு எடுக்க வேண்டும்

என்.எல்.சி.யில் வேலை பெற்றவர்களின் ஒருவர் கூட தமிழகத்தைச் சேர்ந்தவர் இல்லை என சர்ச்சை எழுந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.