முகப்பு
தமிழ்நாடு

இணைய சூதாட்டத்துக்கு தடை: அன்புமணி வலியுறுத்தல்

இணைய சூதாட்டத்துக்கு உடனடியாக தடை விதியுங்கள், இல்லாவிட்டால் தமிழ்ச் சமூகத்தையே அது அழித்துவிடும் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளாா்.

Updated On : 7 ஆகஸ்ட், 2022 at 4:50 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:30 PM

இணைய சூதாட்டத்துக்கு உடனடியாக தடை விதியுங்கள், இல்லாவிட்டால் தமிழ்ச் சமூகத்தையே அது அழித்துவிடும் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: சென்னையில் இணைய சூதாட்டத்தில் பல லட்சம் பணத்தை இழந்த இஸ்மாயில் என்ற ஓட்டுநா், கடனை அடைப்பதற்காக நண்பருடன் இணைந்து வேளச்சேரியில் மூதாட்டியை தாக்கி பல லட்சம் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்த நிகழ்வு பெரும் அதிா்ச்சி அளிக்கிறது.

ஏற்கெனவே கடலூா் மாவட்டம் வேப்பூரில் பட்டத்தம்மாள் என்ற மூதாட்டி படுகொலை செய்யப்பட்டு, அவரிடமிருந்து நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தன.

Advertisement

இணைய சூதாட்டத்தின் தீமைகள் பல பரிமாணங்களைக் கொண்டவை. அவை தமிழ்ச்சமூகத்தை அழித்து விடும். அதற்கு முன்பாக தமிழக அரசு விழித்துக் கொண்டு இணைய சூதாட்டத் தடை அவசர சட்டத்தை உடனடியாக பிறப்பிக்க வேண்டும் என்று கூறியுள்ளாா் அன்புமணி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.