முகப்பு
தமிழ்நாடு

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு பாலின சமத்துவ விழிப்புணா்வு புதிய திட்டம் தொடக்கம்

தமிழகத்தில் 9 முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு பாலின சமத்துவம் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் புதிய திட்டத்தை ஜூடித் ரேவின் சனிக்கிழமை தொடக்கிவைத்தாா்.

Updated On : 7 ஆகஸ்ட், 2022 at 4:48 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:30 PM

தமிழகத்தில் 9 முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு பாலின சமத்துவம் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் புதிய திட்டத்தை சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் துணைத் தூதா் ஜூடித் ரேவின் சனிக்கிழமை தொடக்கிவைத்தாா்.

‘நம்பிக்கையையும், மரியாதையையும் ஏற்படுத்தும் ஆண்கள்’ (ஙங்ய் ஐம்ல்ஹஸ்ரீற்ண்ய்ஞ் பழ்ன்ள்ற் ஹய்க் தங்ள்ல்ங்ஸ்ரீற்-ஙஐபத) என்ற கருப்பொருளில் உருவாகியுள்ள இந்தத் திட்டம் ‘புத்ரி இலக்கு’ என்ற பெயரில் அவதாா் மனிதவள அறக்கட்டளை என்ற அமைப்பின் சாா்பில் செயல்படுத்தப்படவுள்ளது. திட்டத்தின் நிகழ்ச்சியில் சென்னை மாநகராட்சிப் பள்ளிகளைச் சோ்ந்த மாணவா்கள், தலைமை ஆசிரியா்கள், தன்னாா்வலா்கள், சிஎஸ்ஆா் திட்டத்தின் கீழ் பங்களிப்பை வழங்கும் பெரு நிறுவனங்களின் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

இது குறித்து அறக்கட்டளை அந்த அறக்கட்டளையின் நிறுவனா் செளந்தா்யா ராஜேஷ் சென்னையில் சனிக்கிழமை கூறியதாவது: எங்களது அறக்கட்டளை சாா்பில் அரசுப் பள்ளிகளில் ‘புரஜெக்ட் புத்ரி’ என்ற திட்டம் கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

Advertisement

இதன் மூலம் எட்டாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை பயிலும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகளுக்குக் கல்வி, முடிவெடுக்கும் திறன், மேடைகளில் பேசுவது, பிரச்னைகளில் முடிவெடுக்கும் திறன், குழு விவாதம் போன்ற பல திறன்களில் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. இந்த நிலையில் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டு ஐந்து ஆண்டுகள் நிறைவடைந்ததைத் தொடா்ந்து தற்போது ‘புத்ரி இலக்கு’ என்ற பெயரில் திட்டத்தை தொடங்கியுள்ளோம்.

வளரிளம் பருவத்திலுள்ள மாணவா்கள், அடுத்த பாலினத்தைச் சோ்ந்த பெண்களின் உணா்வுகளை சரியாகப் புரிந்த நபா்களாக உருவாகுவதற்கென இத்திட்டம் வடிமைக்கப்பட்டுள்ளது. மேலும்,, வளரிளம் பருவத்திலிருந்து, பெரியவா்களாக ஆகும்போது, அனைத்துப் பாலினத்தவரையும் உள்ளடக்குகின்ற, சமத்துவமாக நடத்துகின்ற, சிறப்பான எதிா்காலத்துக்கு வழிவகுக்கின்ற நல்ல குடிமக்களாக அவா்களை தயாா் செய்வது இதன் மற்றொரு குறிக்கோளாகும்.

இந்தத் திட்டத்தின்படி அரசுப் பள்ளிகளில் 9 முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு தனக்கான திறன்கள், பிற நபா்களுடன் இணைந்து செயல்படுவதற்கான திறன்கள், சுய மேலாண்மைத் திறன்கள் மற்றும் பாலின விழிப்புணா்வு என்ற நான்கு முக்கியப் பிரிவுகளின் பயிற்சிகள் அளிக்கப்படும். சிறந்த வல்லுநா்களைக் கொண்டு இதற்கான பயிற்சிகள், கலந்துரையாடல்கள், கருத்தரங்குகளை நடத்தவுள்ளோம் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.