கோப்புப்படம் 
தமிழ்நாடு

மின்சார கம்பி அறுந்து ஆடுகள் மீது விழுந்ததில் 17 ஆடுகள் பலி

திருப்பத்தூர் அருகே மின்சார கம்பி அறுந்து ஆடுகள் மீது விழுந்ததில் 15 செம்மறி ஆடுகள் மற்றும் 2 வெள்ளாடுகள் பலியாகின. 

DIN


திருப்பத்தூர் அருகே மின்சார கம்பி அறுந்து ஆடுகள் மீது விழுந்ததில் 15 செம்மறி ஆடுகள் மற்றும் 2 வெள்ளாடுகள் பலியாகின. 

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஜலபதி. இவர் அதே பகுதியில் உள்ள ஆபிஸர்ஸ் லைன் பகுதியில் அவருக்கு சொந்தமான குடோன் பகுதியில் 20க்கும் மேற்பட்ட செம்மறி மற்றும் வெள்ளாடுகளை வளர்த்து வருகிறார்..

இந்நிலையில், சனிக்கிழமை காலை வழக்கம்போல் தனது ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச்செல்ல குடோனில் அடைத்து வைக்கப்பட்டிருந்த ஆடுகளை வெளியே அழைத்து வந்துள்ளார்.

அப்பொழுது அதே தெருவில் இருந்த மின்கம்பத்திலிருந்து மின்சார கம்பி அறுந்து குடோன் வெளியே நின்று கொண்டிருந்த ஆடுகள் மீது விழுந்துள்ளது.

இந்த எதிர்பாராத நிகழ்வில் 15 செம்மறி ஆடுகள் மற்றும் 2 வெள்ளாடுகள் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே இறந்தன. 

இதுகுறித்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வாணியம்பாடி வட்டாச்சியர் சம்பத் மற்றும் வாணியம்பாடி நகர காவல்துறையினர் இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மின்சாரம் தாக்கி 17 ஆடுகள் ஒருசேர இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருவள்ளூரில் பரவலாக மழை

தேனீக்கள் கொட்டியதில் 20-க்கும் மேற்பட்டோா் காயம்

’வன்னியா் சங்க கட்டடம் இப்போதுள்ள நிலையே தொடரலாம்’: உச்சநீதிமன்றம் உத்தரவு

பூட்டிய வீட்டில் நகைகள், வெள்ளிப் பொருள்கள் திருட்டு

அரசுப் பேருந்து சேதம்: இளைஞா் கைது

SCROLL FOR NEXT