தமிழ்நாடு

சிஎஸ்ஐஆர் முதல் பெண் தலைமை இயக்குநராக தமிழகத்தின் கலைச்செல்வி நியமனம்!

DIN


புது தில்லி: இந்தியாவின் உயர்அறிவியல் தொழில் ஆராய்ச்சி ஆய்வு நிறுவனமான சிஎஸ்ஐஆர்-இன் முதல் பெண் தலைமை இயக்குநராக தமிழ்நாட்டைச் சேந்த கலைச்செல்வி நியமிக்கப்பட்டுள்ளார். 

நாடு முழுவதும் உள்ள 38 ஆராய்ச்சி நிறுவனங்களுடன் செயல்படும் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கூட்டமைப்பை (சிஎஸ்ஐஆர்) வழிநடத்தும் முதல் பெண் தலைமை இயக்குநராக தமிழகத்தைச் சேர்ந்த மூத்த விஞ்ஞானி நல்லதம்பி கலைச்செல்வி சனிக்கிழமை நியமிக்கப்பட்டார்.

தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டம் உள்ள ஒரு சிறிய நகரமான அம்பாசமுத்திரத்தில் தனது பள்ளிப்படிப்பை தமிழ்வழியில் பயின்றார். இது கல்லூரியில் அறிவியலின் கருத்துக்களைப் புரிந்துகொள்ளவதற்கு உதவியது என்று கூறிய கலைச்செல்வி, தற்போது காரைக்குடியில் உள்ள மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி நிலையத்தின் இயக்குநராக 2019 ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வருகிறார்.

கடந்த ஏப்ரல் மாதம் பயோடெக்னாலஜி துறையின் செயலாளர் ராஜேஷ் கோகலே, சிஎஸ்ஐஆர் இயக்குநர் ஜெனராலக இருந்த சேகர் மாண்டே ஓய்வுபெற்றதால் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு சிஎஸ்ஐஆர் -இன் இயக்குநர் ஜெனரலாக அறிவிக்கப்பட்டுள்ளார். 

இவர், தற்போது அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி துறையின் செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். 

2019 பிப்ரவரி மாதம் மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு (சிஎஸ்ஐஆர்-சிஇசிஆர்ஐ) தலைமை தாங்கிய முதல் பெண் கலைச்செல்வி என்ற பெருமையை உடைத்து தற்போது  சிஎஸ்ஐஆர்-இன் முதல் பெண் தலைமை இயக்குநர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

25 ஆண்டுகளாக ஆராய்ச்சி மற்றும் விஞ்ஞானத் துறையில் பணியாற்றி வரும் கலைச்செல்வி 125 ஆராய்ச்சிக் கட்டுரைகள், 6 கண்டுபிடிப்புகளுக்கான காப்புரிமை பெற்றுள்ளார்.  லித்தியம் அயன் பேட்டரி பற்றிய ஆராய்ச்சியிலும் ஈடுபட்டுள்ள அவர் தற்போது நடைமுறையில் இருக்கும் சோடியம்-அயன், லித்தியம்-சல்பர் பேட்டரிகள் மற்றும் சூப்பர் கேபாசிட்டர்களை உருவாக்குவதில் ஈடுபட்டுள்ளார்.

சிஎஸ்ஐஆர்-இன் முதல் பெண் தலைமை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ள கலைச்செல்விக்கு முதல்வர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் நிறுவனமான சிஎஸ்ஐஆர்-இன் தலைமை இயக்குநராக தமிழத்தைச் சேர்ந்த ஒரு பெண் நியமிக்கப்பட்டிருப்பது சமூக மற்றும் இயற்கை ஆர்வலர்களிடையே வரவேற்பை பெற்றிருப்பதுடன், பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காந்தாரி.. ஈஷா ரெப்பா!

ஸ்ரீரங்கம் தேரோட்டம் கோலாகலம்!

நேரத்தை மிச்சப்படுத்தும் ஏஐ : 94% பணியாளர்களின் கருத்து என்ன?

சென்னை-நாகர்கோவில் சிறப்பு ரயில் 19 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்!

ஆயிரம்விளக்கு அருகே பூங்காவில் சிறுமியை கடித்த வளர்ப்பு நாய்கள்

SCROLL FOR NEXT