முகப்பு
தமிழ்நாடு

மேட்டூர் அணை: நீர்வரத்து 1.15 லட்சம் கன அடியாக அதிகரிப்பு

தொடர் கனமழை காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 1,15,000 கன அடியாக அதிகரிப்பு.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:00 AM
மேட்டூர் அணை (கோப்புப் படம்)
பகிர்:

மேட்டூர்: மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 1,15,000 கன அடியாக அதிகரிப்பு.

கடந்த இரு நாட்களாக காவிரி நீர்ப் பிடிப்பு பகுதிகளில் மழை தணிந்ததால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு நேற்று வினாடிக்கு 1,11,000 கன அடியாக சரிந்தது. நேற்று இரவு நீர் பிடிப்பு பகுதிகளில் லேசான மழை பெய்ததால் நீர்வரத்து இன்று காலை வினாடிக்கு 1,15,000 கன அடியாக அதிகரித்துள்ளது.

அணையிலிருந்து வினாடிக்கு 1,10,000 கன அடி வீதம் வெள்ள நீர் வெளியேற்றப்படுகிறது. அணை மின் நிலையம், சுரங்க மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 23,000கன அடி நீரும் உபரி நீர் போக்கி வழியாக வினாடிக்கு 87,000கன அடி நீரும் வெளியேற்றப்படுகிறது. 

இன்று காலை மேட்டூர் அணை நீர்மட்டம் 120.05 அடியாகவும் நீர் இருப்பு 93.55 டி.எம்.சியாகவும் இருந்தது. பனையில் இருந்து கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 400 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது

முழு கட்டுரையைப் படிக்க →