கோவில் கட்டுவதை விடக் கல்வி அறிவை பரப்ப வேண்டும் என நடிகர் சூரி பேசிய பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் மதுரையில் நடைபெற்ற விருமன் திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் சூரி எதேச்சையாகக் கோயில் கட்டுவதை விடக் கல்வி அறிவை பரப்ப வேண்டும் என பேசியதாக சமூக வலைத்தளங்களில் விடியோக்கள் ஆடியோக்கள் மூலமாகப் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியது
அதற்கு ஹிந்து அமைப்புகள் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.
இந்நிலையில் சூரியின் பிறந்த ஊரான மதுரை மாவட்டம் ராசாக்கூரில் நடைபெற்ற கோயில் திருவிழாவில் திரைப்பட நடிகர் சூரி பொதுமக்களுடன் இணைந்து ஊர் பெரியவர்கள் இளைஞர்களுடன் இணைந்து ஒயிலாட்டம் ஆடும் விடியோவை அவரது சொந்த ஊர்க்காரர்கள் அவரது நண்பர்கள் நடிகர் சூரியின் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவ விட்டு வருகிறார்கள்.
அதில் அவர்களின் கருத்தாக நடிகர் சூரி சுவாமி பக்திக்கும் கோவிலுக்கும் ஆன்மீகத்திற்கும் எதிரானவர் அல்ல. அவர் கடவுள் நம்பிக்கை உள்ளவர் அவருடைய குடும்பம் ஒரு சாமியாடி குடும்பம் என்பதைக் கருத்தாகப் பதிவிட்டுள்ளனர்.
இது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.