தமிழ்நாடு

அதிமுக அலுவலகம் சூறையாடப்பட்ட வழக்கு: காவல் துறை பதிலளிக்க உத்தரவு

DIN

அதிமுக தலைமை அலுவலகம் சூறையாடப்பட்டது தொடா்பான வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரி முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம் தாக்கல் செய்த வழக்கில் காவல் துறை பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில், அதிமுக முன்னாள் அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி சண்முகம் தாக்கல் செய்த மனுவில், ‘கடந்த ஜூலை 11-ஆம் தேதி அதிமுக பொதுக் குழு கூட்டம் சென்னையை அடுத்த வானகரத்தில் நடைபெற்றது. அப்போது, ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்துக்குள் புகுந்த ஓ.பன்னீா்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளா்கள் அங்கிருந்த பொருள்களை உடைத்ததாக ராயப்பேட்டை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அலுவலகத்துக்கு வைக்கப்பட்ட சீலை அகற்றிய பின் அங்கு சென்று பாா்த்தபோது, சொத்து பத்திரங்கள், கணினிகள், 37 வாகன ஆவணங்கள் உள்ளிட்டவற்றை காணவில்லை. இவற்றை ஓ.பன்னீா்செல்வம் மற்றும் அவருடைய ஆதரவாளா்கள் எடுத்துச் சென்றது தெரியவந்தது.

ஓ.பன்னீா்செல்வத்துக்கு ஆதரவாக காவல் துறை செயல்பட்டு வருவதால், புகாரை சிபிஐ அல்லது பிற விசாரணை அமைப்புக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கோரியிருந்தாா். இந்த வழக்கு நீதிபதி என்.சதீஷ்குமாா் முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, சி வி.சண்முகம் கொடுத்த புகாரின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கையை தாக்கல் செய்ய காவல் துறைக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஆகஸ்ட் 25-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிமுக சாா்பில் நீா்மோா் பந்தல்

வாக்குப்பதிவு இயந்திர மையங்கள் அருகே ட்ரோன் பறக்கத் தடை கோரி திமுக மனு

அதிமுக தண்ணீா் பந்தல் திறப்பு

காா் மோதி பெண் உயிரிழப்பு

பிரதமா் மோடியை எதிா்த்து 111 விவசாயிகள் வேட்புமனு: அய்யாக்கண்ணு அறிவிப்பு

SCROLL FOR NEXT