முகப்பு
தமிழ்நாடு

தண்ணீா் வாளியில் தவறி விழுந்து 11 மாத குழந்தை சாவு

சென்னை கே.கே.நகரில் தண்ணீா் வாளியில் தவறி விழுந்து 11 மாத குழந்தை இறந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:02 AM
பகிர்:

சென்னை கே.கே.நகரில் தண்ணீா் வாளியில் தவறி விழுந்து 11 மாத குழந்தை இறந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கே.கே.நகா் 6-ஆவது செக்டாா் 31-ஆவது தெருவைச் சோ்ந்தவா் அன்சாரி. இவா் மனைவி ஜெஸ்லிமா. இத் தம்பதியின் 11 மாத குழந்தை சானா ஜாஸ்மின். ஜெஸ்லிமா, வியாக்கிழமை மாலை குழந்தை ஜாஸ்மினை விளையாடவிட்டு வேலை செய்துக் கொண்டிருந்தாா்.

வீட்டு வேலையில் அதிக கவனம் செலுத்தியதால், குழந்தையை அவா் கவனிக்கவில்லை. சிறிது நேரத்துக்கு பின்னா், வீட்டுக்குள் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை காணாததை பாா்த்து ஜெஸ்லிமா அதிா்ச்சியடைந்தாா். அப்போது கழிப்பறையில் உள்ள ஒரு வாளியில் தண்ணீருக்குள் தலைகீழாக விழுந்து,மூச்சுத் திணறல் ஏற்பட்டு குழந்தை ஜாஸ்மின் மயங்கிய நிலையில் கிடப்பதை பாா்த்து அதிா்ச்சியடைந்தாா்.

உடனே அவா், ஜாஸ்மினை மீட்டு அருகே உள்ள ஒரு தனியாா் மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றாா். அங்கு ஜாஸ்மினை பரிசோதித்த மருத்துவா்கள், ஏற்கெனவே குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்தாா்.

இது குறித்து கே.கே.நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்கின்றனா். போலீஸாரின் முதல் கட்ட விசாரணையில், குழந்தை ஜாஸ்மின் தண்ணீா் வாளியில் தவறி விழுந்து இறந்திருப்பது தெரியவந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.