தமிழ்நாடு

போதைப்பொருள் சங்கிலியை உடைக்க வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

போதைப்பொருள் கொண்டு செல்லப்படும் சங்கிலியை எப்படியாவது உடைக்க வேண்டும் என  முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

DIN

சென்னை: போதைப்பொருள் கொண்டு செல்லப்படும் சங்கிலியை எப்படியாவது உடைக்க வேண்டும் என  முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை கலைவாணர் அரங்கில் "போதைப் பொருள்கள் இல்லாத தமிழ்நாடு" திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்து உரையாற்றினார். மேலும் அவர் ஆற்றிய உரையில் தெரிவித்ததாவது:

தமிழகத்தில் நாளுக்கு நாள் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது.

போதைப்பொருள் பயன்படுத்துவோர் அதில் இருந்து மீள முடியாத அளவுக்கு சென்றுவிடுகின்றனர். போதைப்பொருள் பயன்படுத்துவோரை திருத்த வேண்டிய கடமை நமக்கு உள்ளது. 

போதைப்பொருள் நடமாட்டத்தை ஒழிக்க இரு வழிகள் உள்ளன. போதை மருந்து நடமாட்டத்தை கட்டுப்படுத்துவது. அதனை விற்பவர்களை கைது செய்வது ஒரு வழி. போதைபொருளை பயன்படுத்த வேண்டாம் என்று கூறி அதனால் ஏற்படும் பாதிப்புகளை உணர்த்துவது 2வது வழி.

பொதுமக்களும் இனைந்து செயல்பட்டால்தான் விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும்.

எனது காவல் எல்லையில் போதைப்பொருள் விற்பனையை தடுத்துவிட்டேன் என்று ஒவ்வொரு ஆய்வாளரும் உறுதி எடுக்க வேண்டும். கஞ்சா விளைவிப்பதை முற்றிலுமாக தடுத்து நிறுத்தியாக வேண்டும். மலையடிவாரங்களை கண்காணிக்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

மேலும், போதைப்பொருள் கொண்டு செல்லப்படும் சங்கிலியை எப்படியாவது உடைக்க வேண்டும் என  முதல்வர் மு.க.ஸ்டாலின்  வலியுறுத்திக் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நெல்லையில் பரபரப்பு... காவல் நிலையம், சோதனைச் சாவடி அருகே பெட்ரோல் குண்டு வீச்சு!

தவெக நிர்வாகிகளை குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று கைது செய்த போலீசார்!

பெண்கள் மீதான கறை மமதா பானர்ஜி: பாஜக கடும் விமர்சனம்

வா வாத்தியார் படத்தின் புகைப்படங்கள்

தொழிலாளா் வருங்கால வைப்புநிதி விவகாரம்: தற்காலிக தூய்மைப் பணியாளா்கள் பணி புறக்கணிப்பு வாபஸ்

SCROLL FOR NEXT