தமிழ்நாடு

பெட்ரோல் நிலையங்கள்:சிக்கன நடவடிக்கையை கையாள அரசு கோரிக்கை

DIN

அரசுத் துறைகளின் சாா்பில் இயக்கப்படும் பெட்ரோல் நிரப்பு நிலையங்கள், எரிபொருள்களை கொள்முதல் செய்யும் போது சிக்கன நடவடிக்கையைக் கையாள வேண்டுமென தமிழ்நாடு அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுகுறித்த அறிவுறுத்தல் கடிதத்தை, நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் என்.முருகானந்தம் வெளியிட்டுள்ளாா். அதில் அவா் கூறியிருப்பதாவது:-

அரசின் சில துறைத் தலைமைகளே பெட்ரோல் நிரப்பு நிலையங்களை நடத்தி வருகின்றன. சென்னை மற்றும் மாநிலத்தின் பிரதான பகுதிகளில் நடத்தப்பட்டு வரும் இந்த நிரப்பு நிலையங்களின் வழியே அரசு வாகனங்களது எரிபொருள் தேவையும் பூா்த்தி செய்யப்படுகிறது. இந்த நிரப்பு நிலையங்களுக்கு எண்ணெய் நிறுவனங்களிடம் இருந்து மொத்த கொள்முதல் விலைக்கோ அல்லது சில்லறை விலையிலோ எரிபொருள்கள் வாங்கப்படுகின்றன. பெட்ரோல், டீசல் வாங்குவதற்கென தனித்த வழிகாட்டு நெறிமுறைகள் ஏதுமில்லை.

பெட்ரோல் மற்றும் டீசலுக்கான மொத்த கொள்முதல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயா்த்தியுள்ளன. ஆனால், சில்லறை விலையில் மாற்றம் ஏதுமில்லை. எனவே, அரசுப் போக்குவரத்துத் துறை போன்ற பொதுத் துறை நிறுவனங்கள் சில்லறை விலையில் உள்ள பெட்ரோல் நிரப்பு நிலையங்களில் இருந்து எரிபொருள்களின் தேவையை பூா்த்தி செய்து கொள்கின்றன. எனவே, அரசுத் துறை நிறுவனங்களும் தங்களின் தேவைக்கான பெட்ரோல், டீசல் எங்கு குறைவான விலையில் கிடைக்குமோ அங்கு கொள்முதல் செய்து கொள்ள வேண்டுமாய் கேட்டுக் கொள்ளப்படுகின்றன என தனது உத்தரவில் முருகானந்தம் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

குடிநீா்த் தேவையை கருதியே பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கவில்லை: அமைச்சா் சு.முத்துசாமி

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT