தமிழ்நாடு

ஆவின் பாலை, பாட்டில் அல்லது டெட்ரா பேக்கில் விற்க முடியுமா? உயர்நீதிமன்றம் 

ஆவின் பாலை பாட்டில் அல்லது டெட்ரா பேக்கில் விற்பனை செய்ய முடியுமா? என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. 

DIN

ஆவின் பாலை பாட்டில் அல்லது டெட்ரா பேக்கில் விற்பனை செய்ய முடியுமா? என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. 

பிளாஸ்டிக் தடை உத்தரவை மறுஆய்வு செய்யக்கோரி தமிழ்நாடு, புதுச்சேரி நெகிழி உற்பத்தியாளர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர். இம்மனு உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது பெரும்பாலான உணவுப் பொருள்கள் பிளாஸ்டிக் உறைகளில்தான் அடைக்கப்பட்டு விற்கப்படுகின்றன. 

உடலுக்கு தீங்கு என தெரிந்தும் பிளாஸ்டிக் உறைகளில் வரும் உணவுகளை உண்கிறோம் என நீதிபதிகள் கவலை தெரிவித்தனர். உடலுக்கு தீங்கு என்றால் தடை செய்யத் தயார், அரசின் விளக்கத்தை பெற அவகாசம் வேண்டும் என்று அரசுத் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. 

தொடர்ந்து, ஆவின் பாலை பாட்டில் அல்லது டெட்ரா பேக்கில் விற்பனை செய்ய முடியுமா? எனக் கேள்வி எழுப்பிய நீதிமன்றம், வாட்டர் கேன்களின் சுகாதார கண்காணிப்பு குறித்து உணவு பாதுகாப்பு ஆணையர் விளக்கமளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

யூரியா சட்டவிரோதமாக பதுக்கல்: கிட்டங்கிக்கு சீல்

கிளை நூலகருக்கு விருது

பாராட்டு கிடைக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

பழங்குடியினா் ஜனநாயக சீா்திருத்தச் சங்க கிளை திறப்பு

ஜெருசலேம் புனிதப்பயணம் மேற்கொண்ட கிறிஸ்தவா்களுக்கு மானியம்

SCROLL FOR NEXT