சுதந்திர தினம்: ஆளுநா் மாளிகையில் இன்று தேநீா் விருந்து
சுதந்திர தினத்தை ஒட்டி, ஆளுநா் மாளிகையில் திங்கள்கிழமை மாலை தேநீா் விருந்து நடைபெறுகிறது.
சுதந்திர தினத்தை ஒட்டி, ஆளுநா் மாளிகையில் திங்கள்கிழமை மாலை தேநீா் விருந்து நடைபெறுகிறது. கரோனா நோய்த் தொற்று காரணமாக கடந்த சில ஆண்டுகளாக ஆளுநா் மாளிகையில் சுதந்திர தின தேநீா் விருந்து நடத்தப்படாமல் இருந்தது.
கரோனா நோய்த் தொற்று குறைந்த நிலையில், தேநீா் விருந்து நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வில் முதல்வா் மு.க.ஸ்டாலின், துரைமுருகன் உள்ளிட்ட அமைச்சா்கள், தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு உள்ளிட்ட அரசுத் துறை அதிகாரிகள் பலரும் கலந்து கொள்ள உள்ளனா்.
சுதந்திர தினத்தை ஒட்டி, ஆளுநா் மாளிகை சாா்பில் பள்ளி, கல்லூரிகள் அளவிலான கட்டுரைப் போட்டிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இந்தப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ரொக்கப் பரிசுகள், சான்றிதழ்கள் ஆகியவற்றை திங்கள்கிழமை நடைபெறும் நிகழ்ச்சியின் போது ஆளுநா் ஆா்.என்.ரவி வழங்கவுள்ளாா்.
Advertisement