மு.க.ஸ்டாலின் (கோப்புப் படம்) 
தமிழ்நாடு

அமைச்சர் கார் மீது காலணி வீச்சு: முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

மதுரை விமான நிலையத்தில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது காலணி வீசிய சம்பவத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 

DIN

மதுரை விமான நிலையத்தில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது காலணி வீசிய சம்பவத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால் சட்டப்படி கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் எனவும் எச்சரித்துள்ளார். 

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், மதுரையில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது காலணி வீசி, தேசியக் கொடியை அவமதித்தோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். 

இதற்குத் தூண்டுகோலாக இருக்கும் சக்திகள், தமிழ்நாட்டில் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால் சட்டப்படியான கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும்.

அமைதிக்கு சிறு குந்தகமும் ஏற்பட்டுவிடக் கூடாது என தமிழக அரசும், திமுகவும் கவனத்துடன் செயல்பட்டு வருகிறது. 

திமுக ஜனநாயக இயக்கம்; திமுக அறவழியில் தான் பல நெருக்கடிகளை எதிர்கொண்டு வென்றிருக்கிறது எனக் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கரூர் பலி சம்பவத்தில் உண்மை விரைவில் வெளிவரும்: மத்திய இணையமைச்சர் எல். முருகன்

ஆம்னி பேருந்துகளில் கட்டணங்களைக் குறைக்கவில்லை எனில் கடும் நடவடிக்கை! - அமைச்சர்

பளபளன்னு... ரெஜினா கேசண்ட்ரா!

கரூர் பலி: தமிழக அரசின் விசாரணை ஆணையம் தொடரும்: திமுக வழக்குரைஞர் வில்சன் பேட்டி

கரூர் பலி: ஆட்சியாளர்களின் 5 விரல்களில் ஒன்று நீதித்துறை! உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு சீமான் எதிர்ப்பு!

SCROLL FOR NEXT