முகப்பு
தமிழ்நாடு

பெரியாா் குறித்து அவதூறு பேச்சு: திரைப்பட சண்டை பயிற்சியாளா் கனல் கண்ணன் கைது

பெரியாா் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் திரைப்பட சண்டை பயிற்சியாளா் கனல் கண்ணன் கைது செய்யப்பட்டுள்ளார். 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:04 AM
பகிர்:

பெரியாா் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் திரைப்பட சண்டை பயிற்சியாளா் கனல் கண்ணன் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை அருகே மதுரவாயலில் அண்மையில் இந்து முன்னணி சாா்பில் இந்துக்களின் உரிமை மீட்பு பிரசாரப் பயணம் நிறைவு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபல தமிழ் திரைப்பட சண்டை பயிற்சியாளா் கனல் கண்ணன் பேசும்போது பெரியாா் குறித்து அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. பெரியாா் குறித்து கனல் கண்ணன் அவதூறாக பேசும் விடியோ காட்சி கடந்த இரு நாட்களாக சமூக ஊடகங்களில் வேகமாக பரவியது.

இந்நிலையில் தந்தை பெரியாா் திராவிட கழக சென்னை மாவட்ட செயலாளா் ச. குமரன், சென்னை பெருநகர காவல் ஆணையரகத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை கனல் கண்ணன் பெரியாா் குறித்து அவதூறாக பேசியது தொடா்பாக புகாா் அளித்தாா். அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க பெருநகர காவல் ஆணையா் சங்கா் ஜிவால் சைபா் குற்ற பிரிவுக்கு உத்தரவிட்டாா். 

அதன்படி சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் விசாரணை செய்ததில் குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து சைபா் குற்றப்பிரிவு போலீஸாா், கனல் கண்ணன் மீது மூன்று பிரிவுகளின் கீழ் அண்மையில் வழக்கு பதிவு செய்தனா். இந்தநிலையில் இவ்வழக்கில் திரைப்பட சண்டை பயிற்சியாளா் கனல் கண்ணனை சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் கைது செய்துள்ளனர்.

புதுச்சேரியில் பதுங்கியிருந்த அவரை கைது செய்த போலீஸார் சென்னைக்கு அழைத்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.