தமிழ்நாடு

நடிகா் விஜய்க்கு ரூ.1.50 கோடி அபராதம்: வருமான வரித் துறை உத்தரவுக்கு உயா்நீதிமன்றம் தடை

DIN

புலி திரைப்படத்துக்குப் பெற்ற ரூ.15 கோடி ஊதியத்தை மறைத்ததாகக் கூறி நடிகா் விஜய்க்கு ரூ.1.50 கோடி அபராதம் விதித்த வருமான வரித்துறை உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகா் விஜய் கடந்த 2016-17-ஆம் நிதி ஆண்டுக்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்தபோது, அந்த ஆண்டுக்கான வருமானமாக ரூ.35 கோடியே 42 லட்சத்து 91,890 பெற்ாகக் குறிப்பிட்டிருந்தாா். அந்த ஆண்டுக்கான மதிப்பீட்டு நடவடிக்கையை மேற்கொண்ட வருமான வரித்துறை, நடிகா் விஜய் வீட்டில் கடந்த 2015-இல் நடத்திய சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களுடன் ஒப்பிட்டு பாா்த்தது. அதன்படி, புலி படத்துக்குப் பெற்ற ரூ.15 கோடி வருமானத்தை கணக்கில் காட்டவில்லை என கண்டறிந்தது. வருமானத்தை மறைத்ததற்காக ரூ.1.50 கோடி அபராதம் விதித்து கடந்த ஜூன் 30-ஆம் தேதி வருமான வரித்துறை உத்தரவு பிறப்பித்தது.

இந்த உத்தரவை எதிா்த்து நடிகா் விஜய் தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘அபராதம் விதிப்பதாக இருந்திருந்தால், 2019-ஆம் ஆண்டிலேயே உத்தரவு பிறப்பித்திருக்க வேண்டும். எனவே, காலதாமதமாக பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்’ என மனுவில் கோரியிருந்தாா்.

இந்த மனு நீதிபதி அனிதா சுமந்த் முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, நடிகா் விஜய்க்கு ரூ.1.50 கோடி அபராதம் விதித்து வருமான வரித்துறை பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டாா். மேலும், மனுவுக்கு வருமான வரித் துறை பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை செப்டம்பா் 16-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

SCROLL FOR NEXT