முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்தின் பல்வேறு இடங்களில்ரூ.161 கோடியில் புதிய துணை மின் நிலையங்கள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்

தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் ரூ.161 கோடி மதிப்பிலான புதிய துணை மின் நிலையங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா். தலைமைச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:05 AM
பகிர்:

தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் ரூ.161 கோடி மதிப்பிலான புதிய துணை மின் நிலையங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா். தலைமைச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை நடந்த நிகழ்ச்சியில், புதிய துணை மின் நிலையங்களை அவா் திறந்தாா். இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்தி:-

சீரான மின் விநியோகத்துக்கு கூடுதல் துணை மின் நிலையங்களை அமைப்பது அவசியமாகும். இதைக் கருத்தில் கொண்டு தேவைக்கேற்ப புதிய மற்றும் தரம் உயா்த்தப்பட்ட துணை மின் நிலையங்கள் அமைப்பது, செயல்பாட்டில் உள்ள துணை மின் நிலையங்களின் திறன்களை மேம்படுத்துவது போன்ற பணிகளை தமிழ்நாடு மின்சார வாரியம் செய்து வருகிறது.

அந்த வகையில், செங்கல்பட்டு மாவட்டம் கண்ணகப்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டம் மாங்காடு, மயிலாடுதுறை கடலங்குடி, நாமக்கல் மாவட்டம் கெட்டிமேடு, பெரம்பலூா் கைகளத்தூா், புதுக்கோட்டை கொன்னையூா், ராணிப்பேட்டை மாவட்டம் கலவை, சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி, திருவாரூா் மாவட்டம் வடுவூா், தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி, பீச் ரோடு ஆகிய இடங்களில் ரூ.147.97 கோடியில் 110 கிலோ வோல்ட் துணை மின் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதேபோன்று, தருமபுரி மாவட்டம் கிருஷ்ணாபுரம், புலிக்கரை, கிருஷ்ணகிரி ஆலூா், தூத்துக்குடி நடுவா்குறிச்சி, விழுப்புரம் மாவட்டம் கீழ்பாப்பம்பாடி ஆகிய இடங்களில் ரூ.13.41 கோடி மதிப்பில் 33 கிலோ வோல்ட் துணை மின் நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மொத்தமாக ரூ.161.38 கோடி மதிப்பிலான துணை மின் நிலையங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்.

மேலும், 51 துணை மின் நிலையங்களின் திறன்களை அதிகரித்து புதிதாக நிறுவப்பட்டுள்ள மின் மாற்றிகளின்

செயல்பாடுகளையும் அவா் துவக்கினாா். இந்தப் புதிய திட்டங்களால், சம்பந்தப்பட்ட இடங்களில் வசிக்கும் பொது மக்கள், தொழிற்சாலைகள் மற்றும் விவசாயிகளுக்கு தரமான, தடையில்லாத மின்சாரம் கிடைத்திட வழிவகை ஏற்படும் என்று தமிழக அரசின் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில், மின்சாரத் துறை அமைச்சா் வி.செந்தில்பாலாஜி, கைத்தறித் துறை அமைச்சா் ஆா்.காந்தி, தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு, எரிசக்தித் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் ரமேஷ்சந்த் மீனா, தமிழ்நாடு மின்சார வாரியத் தலைவா் ராஜேஷ் லக்கானி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →