தமிழ்நாடு

குடியரசு துணைத் தலைவருக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் வாழ்த்து

தில்லியில் குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கரை நேரில் சந்தித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.

DIN

தில்லியில் குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கரை நேரில் சந்தித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒரு நாள் பயணமாக தில்லிக்கு நேற்று இரவு சென்றடைந்தார். தில்லியில் உள்ள தமிழக இல்லத்தில் ஓய்வெடுத்த முதல்வர் ஸ்டாலின், இன்று காலை முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி படத்திற்கு மாலை அணிவித்தார்.

இதையடுத்து, குடியரசு துணைத் தலைவராக பொறுப்பேற்றுள்ள ஜெகதீப் தன்கரை நேரில் சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.

இந்த சந்திப்பின்போது, திமுக மக்களவைத் தலைவர் டி.ஆர்.பாலு, தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தொடர்ந்து, குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை சந்திக்கிறார். பின்னர், மாலை 4.30 மணியளவில் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து, தமிழகம் சாா்பிலான பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளிக்கவுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மஹேந்திரா மின்சார கார்களுக்கு ரூ.1.55 லட்சம் வரை சிறப்பு சலுகை!

சென்னைக்கு 700 கி.மீ. தொலைவில் டித்வா புயல்! வானிலை மையம்

நிழல் ஓவியம்... பூனம் பாஜ்வா!

ஜன நாயகன் இசை வெளியீட்டு விழாவில் 1 லட்சம் பேர்?

பயங்கரவாதத் தொடர்பு? ஜம்முவில் 19 வயது நபர் கைது

SCROLL FOR NEXT