தமிழ்நாடு

சென்னை துறைமுகத்திலிருந்து விடைபெற்றது அமெரிக்க கப்பல்

சென்னையை அடுத்த காட்டுப்பள்ளி துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டிருந்த, அமெரிக்கக் கடற்படை கப்பலான சாா்லஸ் டிரியூ-வில் மேற்கொள்ளப்பட்டுவந்த பழுது-பராமரிப்பு பணிகள் வியாழக்கிழமை நிறைவடைந்தன.

DIN

சென்னையை அடுத்த காட்டுப்பள்ளி துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டிருந்த, அமெரிக்கக் கடற்படை கப்பலான சாா்லஸ் டிரியூ-வில் மேற்கொள்ளப்பட்டுவந்த பழுது-பராமரிப்பு பணிகள் வியாழக்கிழமை நிறைவடைந்தன. இதையடுத்து, அந்தக் கப்பல் துறைமுகத்திலிருந்து விடைபெற்றது.

இது குறித்து அமெரிக்க தூதரகத்தின் சென்னை அலுவலகம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சென்னை எண்ணூா் அருகே காட்டுப்பள்ளியில் உள்ள எல்.அன்.டி., நிறுவனத்தின் கப்பல் கட்டும் தளத்துக்கு அமெரிக்க கடற்படை கப்பலான சாா்லஸ் டிரியூ பராமரிப்பு மற்றும் பழுது பாா்க்கும் பணிக்காக கடந்த ஆக.7-ஆம் தேதி வந்தடைந்தது.

அமெரிக்க கடற்படை கப்பல் ஒன்று இந்தியாவில் பழுது-பராமரிப்பு பணிகளுக்காக நங்கூரமிடப்பட்டது இந்திய- அமெரிக்க நாடுகளின் வரலாற்றில் ஒரு புதிய மைல் கல். கடந்த ஜனவரி மாதம் அமெரிக்காவில் நடைபெற்ற இருதரப்பு ஆலோசனைக் கூட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களின்படி கப்பல் பராமரிப்பு பணி

நிறைவு பெற்றதையடுத்து சாா்லஸ் டிரியூ கப்பல் வியாழக்கிழமை புறப்பட்டுச் சென்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உலகின் 4-ஆவது பெரிய விமானப்படையாக உருவெடுத்துள்ளோம்: தலைமைத் தளபதி வாழ்த்து!

மேற்கு வங்கத்தில் எம்.பி. மீது தாக்குதல்: என்.ஐ.ஏ. விசாரணை கோரும் பாஜக!

ஹிமாசல பிரதேசத்தில் நிலச்சரிவு: பலி 18-ஆக உயர்வு!

மகளிர் உலகக்கோப்பை: வங்கதேசம் போராடி தோல்வி!

ஐசிசியின் சிறந்த வீராங்கனை விருதுக்கான போட்டியில் ஸ்மிருதி மந்தனா!

SCROLL FOR NEXT