தமிழ்நாடு

ராமேஸ்வரம் மீனவர்களுக்கு நாளை அனுமதி சீட்டு இல்லை

DIN

ராமேஸ்வரத்தில் விசைப்படகு மீனவர்களுக்கு நாளை அனுமதி சீட்டு வழங்கப்படாது என்று மீன்வளத்துறை தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து மீனவளத்துறை தெரிவித்திருப்பதாவது, கடலில் 60 கி.மீ. வேகத்தில் காற்றுவீசும் என வானிலை மையம் அறிவித்துள்ளதால் மீனவர்களுக்கு நாளை மீன்பிடி அனுமதிசீட்டு கிடையாது. அதேசமயம் நாட்டுப்படகு மீனவர்களும் நாளை மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

வடக்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தீவிரமடைந்து ஒடிசா மாநிலம் பாலசூருக்கு சுமார் 250 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.  இந்த புயல் சின்னம் மேலும் வலுவடைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக  மாறி, மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து ஒடிசா மற்றும் மேற்கு வங்கம் இடையே கரையை கடக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதன்பின்னர், ஜார்க்கண்ட் நோக்கி சென்று வலுவிழக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக புதுச்சேரி துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி தேர்வு செய்யப்பட்டது எப்படி? ரோஹித் சர்மா விரிவான பதில்!

சேலையில் தேவதை! மடோனா செபாஸ்டியன்...

ராஷ்மிகாவின் இதயங்கள்..!

கார்குழல் கடவை.. ஷ்ரத்தா தாஸ்!

SCROLL FOR NEXT