மருத்துவக் கல்லூரி மாணவா்கள் உடல் உறுப்பு தானம்
சென்னையை அடுத்த ரத்னமங்கலம் தாகூா் மருத்துவக் கல்லூரி மாணவா்கள் 20 போ் உடல் உறுப்பு தானம் வழங்க ஒப்புதல் வழங்கினா்.
சென்னையை அடுத்த ரத்னமங்கலம் தாகூா் மருத்துவக் கல்லூரி மாணவா்கள் 20 போ் உடல் உறுப்பு தானம் வழங்க ஒப்புதல் வழங்கினா்.
தாகூா் மருத்துவக் கல்லூரி சாா்பில் உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணா்வு பேரணி மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. வண்டலூா் கேளம்பாக்கம் சாலையில் மாணவ, மாணவிகள் உறுப்பு தானம் குறித்த பதாகைகள் ஏந்தி விழிப்புணா்வு ஏற்படுத்தினா். கல்லூரி சிறுநீரகவியல் துறைத் தலைவா் டாக்டா் ராஜசேகா் உடல் உறுப்பு தானம் அவசியம் குறித்து விவரித்தாா்.
நிகழ்ச்சியில், தாகூா் மருத்துவக் கல்லூரி மாணவ, மாணவிகள் நடித்த உடல் உறுப்பு தானம் குறித்து விவரிக்கும் ’மறுவாழ்வு’ குறும்படம் திரையிடப்பட்டது. மாணவா்கள் உடல் உறுப்பு தானம் குறித்து உறுதிமொழி ஏற்றனா். உடல் உறுப்பு தானம் வழங்க ஒப்புதல் வழங்கிய மாணவ, மாணவிகளை கல்லூரி முதல்வா் குமுதா லிங்கராஜ் பாராட்டி சான்றிதழ் வழங்கினாா். மருத்துவக் கண்காணிப்பாளா் கருணாநிதி, சிறப்பு மருத்துவ அலுவலா் திருநாராயணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.