பாப்பிரெட்டிப்பட்டி அருகேயுள்ள பாப்பம்பாடி பாரதி நகரில் கைது செய்யப்பட்ட மாவோயிஸ்ட் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த செட்டே (எ) சீனிவாச முல்லா கெவுடு. 
தமிழ்நாடு

பாப்பிரெட்டிப்பட்டி அருகே மாவோயிஸ்ட் அமைப்பைச் சேர்ந்தவர் கைது

பாப்பிரெட்டிப்பட்டி அருகே மாவோயிஸ்ட் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த செட்டே (எ) சீனிவாச முல்லா கெவுடு (23) என்பவரை மகாராஷ்டிர மாநில போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.

DIN

அரூர்: பாப்பிரெட்டிப்பட்டி அருகே மாவோயிஸ்ட் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த செட்டே (எ) சீனிவாச முல்லா கெவுடு (23) என்பவரை மகாராஷ்டிர மாநில போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.

மகாராஷ்டிர மாநிலம், பங்கரப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த முல்லா மகன் செட்டே (எ) சீனிவாச முல்லா கெவுடு (23). இவர் மீது, அந்த மாநிலத்தில் உள்ள தர்மராஜா காவல் நிலையத்தில், 2022 பிப்ரவரியில் 10-க்கும் மேற்பட்ட பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மாவோயிஸ்ட் தீவிரவாத அமைப்பில் தொடர்பில் இருந்த இவர், தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், பாப்பம்பாடி அருகேயுள்ள பாரதிநகரில் விவசாயி ஒருவரது வீட்டில் பதுங்கி இருப்பது தெரியவந்தது.

இதுகுறித்த தகவல் அறிந்த மகாராஷ்டிர போலீஸார், சனிக்கிழமை அதிகாலை நேரத்தில் செட்டே (எ) சீனிவாச முல்லா கெவுடுவை கைது செய்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சப்தமே இல்லாமல் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய ஸ்விக்கி!

அமைச்சர் ஐ.பெரியசாமி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை

தினம் தினம் திருநாளே!

மொடக்குறிச்சி அருகே ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியா் வீட்டில் 17 பவுன், ரூ.1 லட்சம் திருட்டு

கொள்முதல் நிலையம் திறக்காததால் மழையில் நனைந்து நெல்மணிகள் முளைத்து சேதம்

SCROLL FOR NEXT