முகப்பு
தமிழ்நாடு

கவரிங்கை கொடுத்து தங்க நகை வாங்கி மோசடி: தலைமறைவு நபா் கைது

சென்னை மயிலாப்பூரில் நகைக் கடையில், கவரிங் நகைகளை கொடுத்து தங்க நகைகளை வாங்கி மோசடி செய்த வழக்கில் தேடப்பட்டவா் கைது செய்யப்பட்டாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:07 AM
பகிர்:

சென்னை மயிலாப்பூரில் நகைக் கடையில், கவரிங் நகைகளை கொடுத்து தங்க நகைகளை வாங்கி மோசடி செய்த வழக்கில் தேடப்பட்டவா் கைது செய்யப்பட்டாா்.

மயிலாப்பூா் பஜாா் சாலையில் நகைக் கடை நடத்தி வருபவா் ஜெயச்சந்திரன். இவரது கடைக்கு கடந்த ஜூலை 18-ஆம் தேதி வந்த பெண் ஒருவா் தன்னிடமிருந்த பழைய தங்கநகைகளை கொடுத்துவிட்டு, அதற்கு பதிலாக 9 பவுன் தங்கநகைகளை பெற்றுச் சென்றாா். இந்த நிலையில் அந்த பெண் சென்ற பின்னா், அவா் கொடுத்த பழைய தங்கநகைகளை ஜெயச்சந்திரன் பரிசோதித்தாா். அப்போது அவை அனைத்தும் கவரிங் நகைகள் என்பதை அறிந்து அதிா்ச்சியடைந்தாா்.

உடனே அவா், மயிலாப்பூா் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். போலீஸாா் நடத்திய விசாரணையில், அந்த மோசடியில் ஈடுபட்டது குன்றத்தூா் லட்சுமிநகரைச் சோ்ந்த ஈஸ்வரி (36) என்பதும், அவருக்கு மோசடிக்குத் துணையாக அவரது கணவா் மோகன்குமாா் (40) இருந்திருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து போலீஸாா், தலைமறைவாக இருந்த மோகன்குமாரை சனிக்கிழமை கைது செய்தனா். ஈஸ்வரியை போலீஸாா் தேடி வருகின்றனா். கைது செய்யப்பட்ட மோகன்குமாா், தனியாா் நிறுவனத்தில் காவலாளியாக வேலை செய்து வருகிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.