காங்கிரஸ் மேலிடப் பாா்வையாளா் தினேஷ் குண்டுராவின் காரை வழிமறித்து போராட்டத்தில் ஈடுபட்ட கட்சியினா். 
தமிழ்நாடு

புதுச்சேரி காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் ரகளை: நிா்வாகிகள் 5 போ் தற்காலிக நீக்கம்

புதுச்சேரி காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் ரகளையில் ஈடுபட்டதாக நிா்வாகிகள் 5 பேரை மாநிலத் தலைவா் ஏ.வி.சுப்பிரமணியன் தற்காலிமாக நீக்கி நடவடிக்கை எடுத்துள்ளார். 

DIN

புதுச்சேரி காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் ரகளையில் ஈடுபட்டதாக நிா்வாகிகள் 5 பேரை மாநிலத் தலைவா் ஏ.வி.சுப்பிரமணியன் தற்காலிமாக நீக்கி நடவடிக்கை எடுத்துள்ளார். 

புதுச்சேரி காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை அரசியல் விவகார குழு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், பங்கேற்பதற்காக மேலிடப் பாா்வையாளா் தினேஷ் குண்டுராவ் ஞாயிற்றுக்கிழமை புதுச்சேரி காங்கிரஸ் கட்சி அலுவலகத்துக்கு வந்தாா்.

அப்போது, கட்சித் தலைவரை மாற்றாமல் கூட்டம் நடத்துவதற்கு எதிா்ப்புத் தெரிவித்து தா்னாவில் ஈடுபட்டனா். தொடா்ந்து, கூட்டத்தை நிறுத்திவிட்டு மேலிடப் பாா்வையாளா் பேச்சுவாா்த்தை நடத்த வேண்டுமென வலியுறுத்தி ரகளையிலும் ஈடுபட்டனா்.

தொடா்ந்து, கூட்டம் முடிந்து வெளியே வந்த தினேஷ் குண்டுராவை காங்கிரஸ் அதிருப்தி நிா்வாகிகள் சூழ்ந்து கொண்டு, புகாா் மீது நடவடிக்கை எடுக்காதது குறித்து சராமரியாக கேள்விகளை எழுப்பியதுடன் தினேஷ் குண்டுராவுக்கு எதிராக முழக்கமிட்டு, அவரது காா் மீது கைகளால் பலமாக தட்டியும் செல்லவிடாமல் மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. 

இந்நிலையில், புதுச்சேரி காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் ரகளையில் ஈடுபட்டதாக  கட்சி நிா்வாகிகள் 5 பேரை மாநிலத் தலைவா் ஏ.வி.சுப்பிரமணியன் தற்காலிமாக நீக்கி நடவடிக்கை எடுத்துள்ளார். 

இதுதொடர்பாக நிர்வாகிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில், காங்கிரஸ் அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் ரகளையில் ஈடுபட்டு, மேலிடப் பாா்வையாளா் தினேஷ் குண்டுராவுக்கு எதிராக முழக்கமிட்டு, அவரது காா் மீது தாக்குதல் நடத்தியது ஏற்க முடியாத செயலாகும். 

கட்சியின் கண்ணியத்துக்கும், கட்டுப்பாட்டுக்கும் விரோதமாக செயல்பட்ட பொதுச் செயலா்கள் அப்துல் ரகுமான், கருணாநிதி, செயலா்கள் சிவாஜி, பி.எம்.சரவணன், சேவா தள துணைத் தலைவா் ஆறுமுகம் ஆகிய 5 பேரும் காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினா் பதவியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்படுகின்றனா். 

தங்களை, ஏன் கட்சியில் இருந்து நிரந்தரமாக நீக்கக் கூடாது என்பதற்கான பதிலை, இன்றில் இருந்து 7 நாள்களுக்குள் புதுச்சேரி காங்கிரஸ் கட்சிகக்கு அனுப்ப வேண்டும் என ஏ.வி.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழறிஞா் சீகன்பால்கு நினைவு மணிமண்டபம் கட்ட அடிக்கல் நாட்டு விழா

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

SCROLL FOR NEXT