கோப்புப்படம் 
தமிழ்நாடு

மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி, சைக்கிள்: புதுவை முதல்வர் அறிவிப்பு

புதுச்சேரியில் 11 மற்றும் 12 வகுப்பு மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்படும் என்று புதுவை பட்ஜெட்டில் முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். 

DIN

புதுச்சேரியில் 11 மற்றும் 12 வகுப்பு மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்படும் என்று புதுவை பட்ஜெட்டில் முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். 

புதுவை மாநிலத்தில் 2022 - 23 ஆம் நிதி ஆண்டிற்காக ரூ. 10,696.61 கோடிக்கான பட்ஜெட்டை நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் ரங்கசாமி சட்டப்பேரவையில் தாக்கல் செய்து உரையாற்றினார். 

அப்போது, பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர் ரங்கசாமி, குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ. 1,000 உதவித் தொகை வழங்கப்படும் என அறிவித்துள்ளார். 

மேலும், அடுத்த முக்கிய அறிவிப்பாக, நடப்பாண்டு முதல் புதுச்சேரியில் 11 மற்றும் 12 வகுப்பு மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்படும் என்றும் 9 ஆம் வகுப்பு முதல் மாணவர்களுக்கு மிதிவண்டி மீண்டும் வழங்கப்படும் என்றும் அறிவித்தார். 

புதுவை பட்ஜெட்டில் கல்வித் துறைக்கு ரூ. 802 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

"அனைவருக்கும் ஸ்டார்ட்அப்' மையம் சென்னை ஐஐடி-யில் தொடக்கம்

வாக்குச்சாவடி நிலைய அலுவலா் 2-க்கான ஆலோசனைக் கூட்டம்

பால் பண்ணை தொழில் முனைவோருக்கு ஒரு மாத திறன் மேம்பாட்டுப் பயிற்சி இன்று தொடக்கம்

இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி தொடக்கம்: வீடு வீடாகச் சென்று படிவங்கள் அளிப்பு

SCROLL FOR NEXT