தஞ்சாவூரில் மதுபானக் கடையை அகற்ற வலியுறுத்தி வணிகர்கள் கடையடைப்புப் போராட்டம்
தஞ்சாவூரில் மதுபானக் கடையை அகற்ற வலியுறுத்தி வணிகர்கள் கடையடைப்புப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தஞ்சாவூரில் மதுபானக் கடையை அகற்ற வலியுறுத்தி வணிகர்கள் கடையடைப்புப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகே மாட்டுமேஸ்திரி சந்து அமைந்துள்ளது. இந்த சந்து, தெற்கு வீதியும் - பழைய பேருந்து நிலையத்தையும் இணைக்கும் முக்கிய வழியாக உள்ளது. பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் வேலைக்குச் செல்பவர்கள் என அனைவரும் இந்த வழியைப் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இந்த பகுதியில் அரசு மதுபானக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த மதுபானக் கடையில் மது குடிப்பவர்கள், அப்பகுதியில் செல்லும் பள்ளி, கல்லூரி மாணவர்களையும், அப்பகுதியில் கடை வைத்திருக்கும் வணிகர்களிடம் தகராறில் ஈடுபடுவதால், இந்த மதுக் கடையை அகற்றுமாறு அப்பகுதி வணிகர்கள் மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்தனர். ஆனால், ஒவ்வரு மனு அளித்தும் இதுவரை கடை அகற்றப்படவில்லை.
இதனால் மதுபானக் கடையை அகற்ற வலியுறுத்தி, அப்பகுதியில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட வணிகர்கள் கடைகளை அடைத்து இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனடியாக கடையை அகற்றவில்லை என்றால் அடுத்த கட்ட போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அவர்கள் அறிவித்துள்ளனர்.