கோப்பிலிருந்து.. 
தமிழ்நாடு

நாய் குறுக்கே வந்ததால் பிரேக் போட்ட ஓட்டுநர்: நடத்துநர் பலி

சேலம் மாவட்டம் கோரிமேடு அருகே, சாலையில் நாய் ஒன்று குறுக்கே வந்ததால் அதன் மீது மோதாமல் இருக்க திடிரென பேருந்தின் ஓட்டுநர் பிரேக் போட்டபோது, பேருந்திலிருந்து நடத்துநர் தூக்கி வீசப்பட்டு பலியானார்.

DIN

சேலம் மாவட்டம் கோரிமேடு அருகே, சாலையில் நாய் ஒன்று குறுக்கே வந்ததால் அதன் மீது மோதாமல் இருக்க திடிரென பேருந்தின் ஓட்டுநர் பிரேக் போட்டபோது, பேருந்திலிருந்து நடத்துநர் தூக்கி வீசப்பட்டு பலியானார்.

கோரிமேடு பகுதியில் இன்று காலை பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது சாலையில் நாய் குறுக்கே வந்ததைப் பார்த்த ஓட்டுநர், பேருந்தை பிரேக் போட்டு நிறுத்தியுள்ளார்.

அப்போது எதிர்பாராதவிதமாக, பேருந்தின் படிகட்டுக்கு அருகே நின்று கொண்டிருந்த நடத்துநர், பேருந்து திடீரென பிரேக் போட்டு நிறுத்தப்பட்டதால் ஏற்பட்ட தடுமாற்றத்தில் பேருந்திலிருந்து வெளியே தூக்கி வீசப்பட்டார்.

தலையில் படுகாயமடைந்த நடத்துநர் ராஜேந்திரன் மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்!

கான்வே 2-ஆவது இரட்டைச் சதம்; நியூஸிலாந்து 575/8-க்கு ‘டிக்ளோ்’

இறுதி ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் பலப்பரீட்சை

தேசிய துப்பாக்கி சுடுதல்: லக்ஷிதா, ஷா்வன் இணைக்கு தங்கம்

சென்னையில் 14.25 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

SCROLL FOR NEXT